ஒப்பந்த புள்ளி இழப்பு: அதானிக்கு மற்றொரு சரிவு

ஒப்பந்த புள்ளி இழப்பு: அதானிக்கு மற்றொரு சரிவு

2 mins read
c560e7e0-f14d-4dad-b2ac-117ccbf17e85
-

ரூ.5,400 மதிப்பு; உத்தரப் பிரதேச மாநில அரசு அதிரடி நடவடிக்கை

புது­டெல்லி: அதானி குழு­மத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த ரூ. 5,400 கோடி மதிப்­புள்ள ஒப்­பந்­த பணியை உத்­த­ரப் பிர­தேச மாநில அரசு ரத்து செய்­துள்­ளது. இதற்­கான கார­ணத்தை அம்­மா­நில அரசு தெரி­விக்­க­வில்லை.

எனி­னும், உத்­த­ரப் பிர­தேச அர­சின் இந்த நட­வ­டிக்கை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தொழி­ல­தி­பர் அதானி மத்­தி­யில் உள்ள பாஜக அர­சின்­ ஆ­த­ர­வா­ளர், பிர­த­மர் மோடி­யின் நண்­பர் என்று எதிர்க்­கட்­சி­கள் கூறி வரு­கி்­ன்­றன. இந்­நி­லை­யில் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் உள்ள பாஜக அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்கை அர­சி­யல் களத்­தில் விவா­தங்­களை எழுப்பி உள்­ளன.

அம்­மா­நில அரசு செயல்­ப­டுத்த உள்ள 'ஸ்மார்ட் மீட்­டர்' வழங்­கும் திட்­டத்­துக்­கா­ன ­ப­ணி­யைத்தான் அதானி குழு­மம் ஏற்­றி­ருந்­தது.

பங்­குச்­சந்­தை­யில் அதானி குழும நிறு­வ­ன பங்­கு­க­ளின் மதிப்பு பெரும் சரிவை சந்­தித்து வரு­கின்­றன. இத­னால் உல­கப் பணக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் பின்­னுக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளார் தொழி­ல­தி­பர் அதானி.

உத்­த­ரப்­ பி­ர­தேச அரசு அறி­வித்த திட்­டப்­ப­ணிக்குப் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளுக்கு மத்­தி­யில் அதானி குழு­ம­மும் விண்­ணப்­பித்­தி­ருந்­தது. மற்ற நிறு­வ­னங்­களைவிட அதானி குழு­மம் தனது ஒப்­பந்­தப் புள்­ளி­யில் குறை­வான தொகை­யைக் குறிப்­பிட்­டி­ருந்­த­ப­டி­யால், 'ஸ்மார்ட் மீட்­டர்' திட்­டப்­பணி அதானி குழு­மத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட இருந்­தது.

இந்­நி­லை­யில், தவிர்க்க இய­லாத கார­ணங்­க­ளால் இந்­தத் டெண்­டரை ரத்து செய்­வ­தாக உத்­த­ரப் பிர­தேச அரசு தெரி­வித்துள்­ளது.

இந்நிலையில், அதானி விவ­கா­ரத்­தில் பிர­த­மர் நரேந்­திர மோடி தொடர்ந்து மௌனம் காப்­பது ஏன் என காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேசி­யத் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்­ளார்.

பிர­த­மர் 'மௌனி பாபா' ஆக மாறி­விட்­டார் என நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய­போது அவர் விமர்­சித்­தார்.

பிர­த­மர் நரேந்­திர மோடி­யை­யும் தொழி­ல­தி­பர் அதா­னி­யை­யும் தொடர்­பு­ப­டுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் ஆதா­ர­மில்­லாத குற்­றச்­சாட்­டு­க­ளைத் தெரி­வித்த ராகுல் காந்தி மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என பாஜக எம்பி நிஷி­கந்த் துபே வலி­யு­றுத்தி உள்­ளார்.

இது­தொ­டர்­பாக மக்­க­ளவை சபா­நா­ய­க­ருக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில், எந்­த­வி­த­மான ஆதா­ர­மும் இல்­லா­மல் இத்­த­கைய குற்­றச்­சாட்டை ராகுல் காந்தி முன்­வைத்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"பிர­த­மர் மோடி குறித்து ஆதா­ர­மற்ற, அவ­தூ­றான, களங்­கம் விளை­விக்­கக்­கூ­டிய குற்­றச்­சாட்­டு­களை ராகுல் கூறி­யுள்­ளார். உரிய ஆதா­ரங்­களை அளிக்­கா­மல் அவர் நாடா­ளு­மன்ற அவையைத் தற­வாக வழி­ந­டத்தி உள்­ளார்," என நிஷி­கந்த் துபே எம்பி தெரி­வித்­துள்­ளார்.