கணவரின் சகோதரர்களையும் ஒருசேர மணம்புரியும் பெண்கள்

1 mins read
34904ead-d195-4c4f-a92d-b31f3ec9bd5e
-

இடா­ந­கர்: மண­ம­கனை முடிவு செய்த பின்­னர், அவ­ரது உடன்­பிறந்த சகோ­த­ரர்­கள் அனை­வ­ரை­யும் ஒரு பெண் திரு­ம­ணம் செய்து­ கொள்­ளும் பாரம்­ப­ரி­யம் இந்­தி­யா­வின் இமாச்­ச­லப் பிர­தேச மாநி­லத்­தில் இன்­ற­ள­வும் நடை­மு­றை­யில் உள்­ளது.

இத­னால் குடும்­பத்­தில் எந்­தப் பிரச்­சி­னை­யும் எழு­வ­தில்லை என்­றும் பல பெண்­கள் மகிழ்ச்­சி­க­ர­மாக குடும்­பம் நடத்தி வரு­கின்­ற­னர் என்­றும் அவ்­வூர் பெரி­ய­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

அங்கு டேரா­டூன் மாவட்­டத்­துக்கு அருகே உள்ள சிற்­றூ­ரைச் சேர்ந்­த­வர் ராஜோ வெர்மா. இவ­ரது மகள் குட்டூ என்­ப­வரை திரு­ம­ணம் செய்து கொள்ள முடிவு செய்­யப்­பட்­ட­போது, குட்­டூ­வின் நான்கு சகோ­த­ரர்­க­ளை­யும் ஒரு­சேர திரு­ம­ணம் செய்து கொண்­டார். எனி­னும் தனது முதல் கண­வர் என்­றால் அது குட்­டூ­தான் என்­கி­றார்.

இதே­போல் பல பெண்­கள் இரண்டு, மூன்று சகோ­த­ரர்­களை ஒரு­சேர திரு­ம­ணம் செய்­து­கொண்டு வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

எண்­பது வய­தான புத்தி தேவி என்ற மூதாட்்டி தாம் இரண்டு சகோ­த­ரர்­க­ளைத் திரு­ம­ணம் செய்து பிரச்­சி­னை­கள் இன்றி குடும்­பம் நடத்­தி­ய­தா­கச் சொல்­கி­றார். இது­போன்ற திரு­மண நடை­மு­றை­யால் பொரு­ளி­யல் பிரச்­சி­னை­கள் குறை­யும் என்­றும் உற­வு­கள் வலுப்­படும் என்­றும் இப்­ப­கு­தி­யைச் சேர்ந்த முதி­ய­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

அதே­ச­ம­யம் இளை­யர்­கள் இந்­ந­டை­முறை தங்­க­ளுக்­குச் சரிப்­பட்டு வராது என்று கூறு­வ­தை­யும் ஒப்­புக் கொள்­கி­றார்­கள்.