பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் காங்கிஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
கர்நாடகாவில் மிக விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவகுமாருக்கு அமலாக்கத்துறை மூலம் பாஜக நெருக்கடி கொடுப்பதாக காங்கிரஸ் சாடி உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொத்துக்குவிப்பு புகார்களில் சிக்கினார் சிவகுமார்.
டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மட்டும் கணக்கில் வராத ரூ.8 கோடி ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், பணப் பரிவர்த்தனை தொடர்பான விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி சிவகுமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பபதிவு செய்தது. அவர் கைது செய்யப்பட்டு, டெல்லியில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்மையில் சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

