ஐந்தாவது பெரிய பொருளியல்: பிரதமர் மோடி பெருமிதம்

ஐந்தாவது பெரிய பொருளியல்: பிரதமர் மோடி பெருமிதம்

1 mins read
158cc6ca-c52c-4144-ad86-69e5660369dd
-

புது­டெல்லி: உல­கின் ஆகப்­பெ­ரிய ஐந்­தா­வது பொரு­ளி­யல் நாடாக இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ள­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

ஊழ­லற்ற இந்­தியா உரு­வா­கிக் கொண்­டி­ருப்­ப­தாக மக்­க­ள­வை­யில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

மக்­க­ள­வை­யில் அதி­பர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீது பிர­த­மர் மோடி உரை­யாற்­றி­னார். அப்­போது, முன்­னர் இந்­தியா உல­கத்தை நம்­பி இ­ருந்­தது என்­றும் இப்­போது இந்­தி­யாவை உல­கம் நம்பி இருக்­கும் காலம் உரு­வா­கி­யுள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அரசு நிர்­வா­கத்­தில் நிலவி வந்த ஊழ­லில் இருந்து மக்­க­ளுக்கு விடு­தலை கிடைத்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட பிர­த­மர் மோடி, இந்­தி­யா­வின் அதி­வே­க­மான வளர்ச்சி இன்று பல­ரா­லும் கவனித்­துப் பேசப்­ப­டு­கிறது என்­றார்.

"அண்டை நாடு­களில் பொரு­ளா­தார வீழ்ச்சி ஏற்­பட்­டுள்ள நிலை­யில், இந்­தியா முன்­னேறி வரு­கிறது. இந்த அர­சின் சாதனை, இந்­திய மக்­களை பெரு­மை­யில் ஆழ்த்தி உள்­ளது.

"எதிர்­கா­லத்தைக் கணித்துக் கூறும் வல்­லு­நர்­க­ளுக்கு இந்­தியா மீது பெரும் நம்­பிக்கை உள்­ளது. ஜி20 நாடு­க­ளின் தலை­மைப் பொறுப்பை இந்­தியா ஏற்­றுள்­ளது இந்­தி­யர்­கள் அனை­வ­ருக்­கும் பெருமை. சிறந்த முடி­வு­களை எடுக்­கக்­கூ­டிய தேச நல­னில் அக்­கறை உள்ள நிலை­யான அரசு தற்­போது உள்­ளது," என்­றார் பிர­த­மர் மோடி.

கல்வி தொடங்கி ஒவ்­வொரு துறை­யி­லும் இந்­தியா புது வர­லாற்­றைப் படைத்து வரு­வ­தா­க­வும் நெருக்­க­டி­யான காலத்­தி­லும்­கூட மின்­னி­லக்க பரி­வர்த்­த­னை­யில் இந்­தியா வளர்ச்சி ககண்­டுள்­ள­தா­க­வும் பிர­த­மர் மோடி கூறி­னார்.