மாணவியைச் சீரழித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர்: கர்நாடகாவில் கொடூரச் சம்பவம்

மாணவியைச் சீரழித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர்: கர்நாடகாவில் கொடூரச் சம்பவம்

2 mins read
d39637e1-b100-47d2-9541-88fa6cb13e65
-

பெங்­க­ளூரு: கல்­லூரி முதல்­வரே மாண­வி­யைச் சீர­ழித்­துக் கொன்று, தூக்­கில் தொங்­க­விட்ட கொடூ­ரம் கர்­நா­ட­கா­வில் அரங்­கேறி உள்­ளது.

அங்­குள்ள ராய்ச்­சூர் மாவட்­டத்­தில் இயங்கி வரும் தனி­யார் கல்­லூ­ரி­யில் அந்த மாணவி படித்து வந்­தார்.

ராய்ச்­சூர் மாவட்­டத்­தில் இயங்கி வரு­கிறது விஸ்­வேஷ்­வ­ராய் பல்­க­லைக் கழ­கம். அதன் நிர்­வா­கத்­தில் உள்ள கல்­லூ­ரி­யில் ஏரா­ள­மான மாண­வி­கள் படித்து வரு­கின்­ற­னர். அவர்­களில் பலர் கல்­லூரி விடு­தி­யில் தங்­கி­யுள்­ள­னர்.

கல்­லூரி முதல்­வ­ரும் விடு­திப் பொறுப்­பா­ள­ரு­மான ரமேஷ் என்­ப­வர், விடுதி மாண­வி­க­ளி­டம் அத்­து­மீறி நடந்­து­கொண்­டுள்­ளார். பல மாண­வி­க­ளுக்கு அவர் பாலி­யல் தொல்லை கொடுத்து வந்­த­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், இரு தினங்­க­ளுக்கு முன்­னர் 17 வயது மாணவி ஒரு­வர் கல்­லூரி விடு­தி­யில் தூக்­கிட்டு உயிரை மாய்த்­துக்கொண்­ட­தாக தக­வல் வெளி­யா­னது.

இது குறித்து விடுதி மாண­வி­களே உயி­ரி­ழந்த மாண­வி­யின் குடும்­பத்­தா­ருக்குத் தக­வல் தெரி­வித்­த­னர். அல­றி­ய­டித்­துக் கொண்டு விரைந்து வந்த மாண­வி­யின் குடும்­பத்­தார் அவ­ரது மர­ணத்­தில் சந்­தே­கம் இருப்­ப­தாக கூறி­ய­து­டன், போராட்­டத்­தி­லும் ஈடு­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டது. விடுதி மாண­வி­க­ளி­டம் விசா­ரித்­த­போது, விடுதி பொறுப்­பா­ளர் ரமேஷ் மாண­வி­க­ளி­டம் தகாத முறை­யில் நடந்துகொண்­டது தெரி­ய­வந்­தது.

மேலும் உயி­ரி­ழந்த மாண­வியை அவர் இடை­வி­டா­மல் பாலி­யல் ரீதி­யில் சீண்­டி­ய­தால் அம்­மாணவி வேறு கல்­லூ­ரிக்­குச் செல்ல முடி­வெ­டுத்­தி­ருந்­தார்.

இதை­ய­றிந்த ரமேஷ், சம்­ப­வத்­தன்று அம்­மா­ண­வியை தனது அறைக்கு அழைத்­துச் சென்று சீர­ழித்­துள்­ளார். பின்­னர் அம்­மா­ண­வி­யைக் கொன்று விடுதி அறை ஒன்­றில் தூக்­கில் தொங்­க­விட்­டுள்­ளார்.

இதன் மூலம் மாண­வியே தன் உயிரை மாய்த்­துக் கொண்­ட­தாக அவர் சித்­தி­ரிக்க முயன்­றுள்­ளார். காவல்­துறை விசா­ர­ணை­யில் அனைத்­தும் அம்­ப­ல­மான நிலை­யில், ரமேஷ் தலை­ம­றை­வா­னார்.

எனி­னும், தீவிர தேடு­தல் வேட்டை­யின் முடி­வில் காவல்­துறை அவ­ரைக் கைது செய்­துள்­ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.