மின்னிலக்க கிரெடிட் சேவை இந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தகவல்

மின்னிலக்க கிரெடிட் சேவை இந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தகவல்

2 mins read
8a74f2a5-7221-48a5-96df-c4ee3f1503b6
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் மின்­னி­லக்க கிரெ­டிட் சேவை முறையை மத்­திய அரசு அமல்­ப­டுத்த உள்­ளது.

இதற்­கான ஏற்­பா­டு­களை மத்­திய தக­வல் தொழில்­நுட்­பத் துறை அமைச்சு செய்து வரு­கிறது.

இந்­தத் திட்­டத்­தின் மூலம் பெரிய வங்­கி­களில் இருந்து சாலை­யோர சிறு வியா­பா­ரி­கள்­கூட கடன் பெற இய­லும் என்­றும் அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் பய­னுள்­ள­தாக அமை­யும் என்­றும் மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

"இந்த மின்­னி­லக்க கிரெ­டிட் சேவை­யா­னது, யுபிஐ சேவை­யைப் போலவே அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். இந்த ஆண்டே இச்­சே­வையை அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளோம்," என்று மத்­திய அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, தக­வல் தொழில்­நுட்­பத் துறை அமைச்சு சார்­பில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள யுபிஐ சேவைக்­காக 'குரல் வழி' பணம் செலுத்­து­வ­தற்­கான புதிய செயலி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் மக்­கள் விரை­வில் தங்­கள் மொழி­யி­லேயே தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு பணப் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்ள இய­லும். 18 இந்­திய மொழி­களில் இந்­தச் சேவை­யைப் பெற முடி­யும்.

இந்த மின்­னி­லக்க கிரெ­டிட் சேவை அடுத்த சில மாதங்­களில் வலு­வா­கக் கட்­ட­மைக்­கப்­படும்.

தற்­போது பயன்­பாட்­டில் உள்ள யுபிஐ முறையை அனைத்­து­ல­கப் பணப் பரி­வர்த்­தனை முறை­யாக மாற்­றும் முயற்சி மேற்­கொள்­ளப்­ பட்டுள்ளது.

இது தொடர்­பாக சிங்­கப்­பூர், நேப்­பா­ளம், பூட்­டான், இங்கிலாந்து உள்­ளிட்ட பல்வேறு நாடு­க­ளு­டன் இணைந்து உரிய நட­வடிக்கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

மின்­னி­லக்க கிரெ­டிட் சேவை மூலம் பணப் பரி­வர்த்­த­னை­கள் மேலும் எளி­தில் நடை­பெ­றும் என்­றும் வெளி­நாட்டு வாழ் இந்­தி­யர்­கள் பய­ன­டை­யும் வகை­யில் மிக விரை­வில் பத்து நாடு­களில் யுபிஐ சேவை விரி­வாக்­கப்­படும் என்­றும் மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தி­யா­வின் யுபிஐ முறையை சிங்­கப்­பூ­ரின் பேநவ் சிஸ்­ட­மு­டன் இணைக்­கும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு இருப்­ப­தா­க­வும் இதன் மூலம் எல்லை தாண்­டிய பணப் பரி­வர்த்­த­னை­கள் எளி­தாக்­கப்­படும் என்­றும் சம்­பந்­தப்­பட்ட வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.