நீதிமன்றம்: முதலீட்டாளர்களை காப்பாற்ற நிபுணர் குழு

நீதிமன்றம்: முதலீட்டாளர்களை காப்பாற்ற நிபுணர் குழு

3 mins read
8cfc20d2-693d-433d-86e2-975c79c528c9
-

புது­டெல்லி: அதானி குழும நிறு­வ­னங்­க­ளுக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்ள நிலை­யில், இந்தியப் பங்­குச் சந்தைக் கட்­டுப்­பாட்டு அமைப்­பான 'செபி' இந்த விவ­கா­ரம் தொடர்­பாக விளக்­கம் அளிக்க வேண்­டும் என உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும், இந்­திய முத­லீட்­டா­ளர்­கள் பாது­காக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தற்­கான வழி­மு­றை­கள் இருப்­பது அவ­சி­யம் என்று உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி டி.ஒய்.சந்­தி­ர­சூட் தலை­மை­யி­லான அமர்வு அறிவுறுத்தியது.

பங்­குச்­சந்­தை­யில் அதானி குழும நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள் பெரும் சரிவை சந்­தித்­துள்­ளன. ஹிண்­டன்­பர்க் ஆய்­வ­றிக்­கை­யில் அதானி குழு­மம் பல்­வேறு முறை­கே­டு­களில் ஈடு­பட்­ட­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதானி நிறு­வ­னப் பங்­கு­களின் மதிப்பு வேக­மாக சரிவு கண்டு வரு­வ­தை­ய­டுத்து இந்­தி­யப் பங்­குச் சந்தை முத­லீட்­டா­ளர்­கள் கடும் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர். தங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்­நி­லை­யில், அதானி விவ­கா­ரம் தொடர்­பாக ஓய்­வு­பெற்ற உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­யின் காண்­கா­ணிப்­பின் கீழ் விசா­ர­ணைக் குழுவை அமைத்து உரிய வகை­யில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் எனப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இது தொடர்­பாக உச்ச நீதி­மன்­றத்­தில் பொது­நல மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன. இம்­ம­னுக்­கள் மீதான விசா­ரணை விரைவில் நடத்­தப்­படும் என அண்­மை­யில் உச்ச நீதிமன்­றம் அறி­வித்­தி­ருந்­தது.

அதன்­படி விசா­ரணை தொடங்கி உள்­ளது. நேற்­று­முன்­தி­னம் நடந்த விசா­ர­ணை­யின்­போதே உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் மேற்­கு­றிப்­பிட்ட உத்­த­ர­வுகளைப் பிறப்­பித்­த­னர்.

"அதானி குழும நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நிலை போல் மீண்­டும் நடக்­கா­மல் இருக்க என்­னென்ன நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இல்லை­யெ­னில் உச்ச நீதி­மன்­றம் தலை­யிட்டு ஒரு வழி­மு­றையை உரு­வாக்க வேண்­டும் என்று நினைக்­கி­றீர்­களா?

"கொள்கை விவ­கா­ரங்­களில் தலை­யிட உச்ச நீதி­மன்­றம் விரும்­ப­வில்லை. ஏனெ­னில், அது மத்திய அர­சாங்­கத்­தின் வேலை," என்று உச்ச நீதிமன்ற நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

முத­லீட்­டா­ளர்­க­ளின் நலனை பாது­காப்­ப­தில் மத்­திய அரசு ஆர்­வத்­து­டன் செயல்­ப­டு­மா­னால் தற்­போ­தைய ஒட்­டு­மொத்த நில­வ­ரத்தை ஆராய நீதி­பதி, துறை­சார் நிபு­ணர்­கள் அடங்­கிய குழுவை அமைக்க உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­வி­டும் என்று என்­றார் தலைமை நீதி­பதி.

இதற்­கி­டையே, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான 'செபி' சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர், அதானி விவ­கா­ரம் தொடர்­பாக 'செபி' உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து இந்த வழக்கு விசா­ரணை திங்­கட்­கி­ழ­மைக்கு (நாளை) ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அதானி குழும பங்­கு­கள் சரி­வ­டைந்­தது தொடர்­பாக அந்­நி­று­வ­னத்­து­டன் பேச இருப்­ப­தாக எல்­ஐசி நிறு­வ­னத்­தின் தலை­வர் எம்.ஆர்.குமார் தெரி­வித்­துள்­ளார்.

நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள அதானி குழு­மத்­தின் உயர்­மட்ட அதி­கா­ரி­களை, எல்­ஐசி நிர்­வாக குழு விரை­வில் சந்­திக்­கும் என்­றும் தற்­போ­தைய நெருக்­கடி நிலையை அதானி குழு­மம் எவ்­வாறு அணுக உள்­ளது என்­பது குறித்து விளக்­கம் கேட்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

எனி­னும், உயர் அதி­கா­ரி­கள் மட்­டத்­தி­லான இந்­தப் பேச்­சுக்­கள் எப்­போது நடை­பெ­றும் என்­பதை இப்­போதே உறு­தி­யா­கத் தெரி­விக்­க­வில்லை என்­றார் எம்.ஆர்.குமார்.

இதற்­கி­டையே, ஹிண்­டன்­பர்க் நிறு­வன அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்ள அதானி குழு­மம் தயா­ராகி உள்­ளது என்­றும் இதற்­காக அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த சட்ட நிறு­வ­னத்தை அணு­கி­யுள்­ள­தா­க­வும் ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.