'தமிழக மீனவர் பிரச்சினை மனிதாபிமான விவகாரம்'

'தமிழக மீனவர் பிரச்சினை மனிதாபிமான விவகாரம்'

1 mins read
27ce6547-30a5-49b6-9041-291fc890a627
-

புது­டெல்லி: தமி­ழக மீன­வர் பிரச்­சினை மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் அணு­கப்­பட வேண்­டும் என மத்­திய மீன்­வ­ளத்­துறை இணை­ய­மைச்­சர் முரு­கன் தெரி­வித்­துள்­ளார்.

இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள அவர், அங்கு அந்­நாட்டு மீன்­வ­ளத்­துறை அமைச்­சர் டக்­ளஸ் தேவா­னந்­தாவை சந்­தித்­துப் பேசி­ய­போது, தமி­ழக மீன­வர்­கள் எதிர்­கொண்­டி­ருப்­பது வாழ்­வா­தா­ரப் பிரச்­சினை என்று குறிப்­பிட்­டார்.

இத்­த­க­வலை கொழும்­பில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கம் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்­ளது. தமது பய­ணத்­தின்­போது தலை­மன்­னார் பகு­திக்­குச் சென்ற அவர், அங்கு இந்­தியா, இலங்கை இடை­யே­யான பட­குப் போக்­கு­வ­ரத்­துக்­கான ஏற்­பா­டு­களை பார்­வை­யிட்­டார். இதன் மூலம் இரு நாட்டு மக்­க­ளுக்கு இடை­யே­யான ஆழ­மான இணைப்பு, இரு­த­ரப்பு தொடர்பு, வணிக பரி­மாற்­றங்­க­ளுக்கு ஊக்­கு­விப்பு கிடைக்­கும் என இந்­தி­யத் தூத­ர­கம் கூறி­யுள்­ளது.

முன்­ன­தாக மத்­திய வெளி­யு­றவு மந்­திரி ஜெய்­சங்­க­ரும் கடந்த மாதம் இலங்கை சென்­றி­ருந்­தார். அப்­போது அவ­ரும் தமி­ழக மீன­வர் பிரச்­சினை குறித்து இலங்­கைத் தரப்­பு­டன் ஆலோ­சனை மேற்­கொண்­ட­தாக இந்­தி­யத் தூத­ர­கம் குறிப்­பிட்­டுள்­ளது.