இந்திய ராணுவ பெண் மருத்துவரின் சேவை; முத்தமிட்டு அன்பு பாராட்டிய துருக்கி பெண்

இந்திய ராணுவ பெண் மருத்துவரின் சேவை; முத்தமிட்டு அன்பு பாராட்டிய துருக்கி பெண்

1 mins read
37c91cf0-8e17-44c7-ac3a-0ec152fc38c6
-

புது­டெல்லி: நில­ந­டுக்­கத்­தால் பெரும் சீர­ழி­வைச் சந்­தித்­துள்ள துருக்­கி­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மருத்­து­வச் சேவை அளித்து வரும் இந்­திய ராணு­வத்­தி­ன­ரைப் பல­ரும் பாராட்டி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், இந்­திய மருத்­து­வக்­கு­ழு­வைச் சேர்ந்த மேஜர் வீணா திவா­ரி­யின் கன்­னத்­தில் முத்­த­மிட்டு துருக்கி பெண்மணி ஒரு­வர் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டம் ஒன்றை இந்­திய ராணு­வம் வெளி­யிட்­டது.

ராணுவ மருத்­து­வர் கர்­னல் யது­வீர் சிங் தலை­மை­யில் 14 மருத்­து­வர்­கள் , தாதி­யர்­கள் உள்­ளிட்ட 86 பேர் கொண்ட மருத்துவக் குழ துருக்கி சென்­றுள்­ளது. அங்கு காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு இக்­குழு­வி­னர் சிகிச்சை அளிக்­கின்­ற­னர். மேஜர் வீணா திவாரியும் இரவு பகல் பாரா­மல் மருத்­து­வச் சேவை­யாற்றுகிறார்.

இதைக் கண்டு நெகிழ்ந்து­போன துருக்கி பெண்­மணி மேஜர் வீணா­வுக்கு நன்றி தெரி­வித்­தார். அப்­போது உணர்ச்­சி­வசப்­பட்ட அவர், கண்­ணீர் சிந்­தி­ய­ப­டியே இந்­திய மேஜ­ரைக் கட்­டி­ய­ணைத்து கன்­னத்­தில் முத்­த­மிட்­டார்.

இந்­நி­லை­யில் கட்­டட இடி­பா­டு­க­ளுக்­குள் சிக்­கித்­த­வித்த ஆறு வய­தான நஸ்­‌ரின் என்ற சிறுமி இந்­திய வீரர்­க­ளால் மீட்­கப்­பட்­டாள். மேஜர் வீணா தலை­மை­யி­லான குழு தீவிர சிகிச்சை அளித்­ததை அடுத்து, சிறுமி உயிர் பிழைத்­தாள். சிறு­மி­யுடன் மேஜர் வீணா திவாரி இருக்­கும் புகைப்­ப­டத்­தை­யும் இந்­திய ராணு­வம் வெளி­யிட்­டி­ருக்­கிறது.

வீணா­வின் தந்தையும், பாட்­ட­னா­ரும் இந்­திய ராணு­வத்­தில் பணி­யாற்­றி­ய­வர்­கள் ஆவர். மூன்­றா­வது தலை­மு­றை­யைச் சேர்ந்த வீணா­வும் மருத்­து­வம் படித்து ராணு­வத்­தில் இணைந்து சேவை­யாற்றி வரு­கி­றார்.