செய்தியாளர் படுகொலை: வெடித்தது போராட்டம்

செய்தியாளர் படுகொலை: வெடித்தது போராட்டம்

2 mins read
ac753073-5067-45de-ba78-0b448e37cf10
-

மகாராஷ்டிராவில் பரபரப்பு; பாஜகவுக்கு நெருக்கமான நில விற்பனையாளர் கைது

மும்பை: எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னத்­தின் புதிய தொழிற்­சாலைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தொடர் செய்­தி­களை வெளி­யிட்டு வந்த செய்­தி­யா­ளர் சஷி­காந்த் வாரிஷ் (படம்) என்­ப­வர் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து வெளிப்­ப­டை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்­றும் குற்­ற­வா­ளிக்கு கடும் தண்­டனை வழங்­கப்­பட வேண்­டும் என்­றும் அம்­மா­நி­லத்­தைச் சேர்ந்த செய்­தி­யா­ளர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து சிறப்­புப் புலனாய்­வுப் படையை அமைத்­துள்­ளது அம்­மா­நில அரசு.

மகா­ராஷ்­டிரா மாநி­லம் ரத்­ன­கிரி பகு­தி­யைச் சேர்ந்­த­வர் செய்தி­யா­ளர் சஷி­காந்த் (48 வயது). 'மகா­ந­கரி டைம்ஸ்' என்ற மராத்தி மொழி பத்­தி­ரி­கை­யில், அப்­ப­குதி சார்ந்த பிரச்­சி­னை­கள் குறித்து செய்­தி­களை எழுதி வந்­தார். குறிப்­பாக தனி­யார் நிறு­வ­னம் ஒன்று ரத்­ன­கிரி­யில் அமைக்­கத் திட்­ட­மிட்­டுள்ள புதிய தொழிற்­சாலையால் சுற்­றுச்­சூழலுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­கள் குறித்து அவர் வெளி­யிட்ட செய்தி­க­ளுக்கு பொது­மக்­கள் தரப்­பில் ஆத­ரவு பெரு­கி­யது.

இத­னால் அந்த தனி­யார் நிறு­வ­னத்­துக்கு நிலங்­களை கைய­கப்­ப­டுத்திக் கொடுக்­கும் பணியை மேற்­கொண்டு வரும் நில விற்­பனை­யா­ளர் பந்­தா­ரி­நாத் அம்­பேர்­கர் (42 வயது) கோப­ம­டைந்­தார். தனி­யார் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக செய்தி வெளி­யிட வேண்­டாம் என அவர் சஷி­காந்தை மிரட்­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மேலும், ஏற்­கெ­னவே அவர் இது­போன்ற பல­ருக்கு மிரட்­டல் விடுத்­த­தா­கவும் தெரி­கிறது.

எனி­னும் மிரட்­ட­லை­யும் மீறி சஷி­காந்த் செய்­தி­களை வெளி­யிட்டு வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் பிர­த­மர் நரேந்­திர மோடி, மகா­ராஷ்­டிர முதல்­வர் ஆகி­யோ­ரு­டன் பந்­தா­ரி­நாத் இருக்­கும் புகைப்­ப­டம் ஒன்றை வெளி­யிட்டு, 'பிர­த­மர், முதல்­வ­ரு­டன் குற்­ற­வாளி' என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இத­னால் ஆவே­ச­ம­டைந்த பந்­தா­ரி­நாத், சஷி­காந்தை தீர்த்­துக்­கட்ட முடி­வெ­டுத்­துள்­ளார். அதன்­படி கடந்த 6ஆம் தேதி ரத்­ன­கி­ரி­யில் உள்ள ஒரு பெட்­ரோல் நிலை­யம் அருகே சசி­காந்த் நின்­றி­ருப்­பதை அவர் கவ­னித்­தார். பின்­னர், தன் காரை வேக­மாக ஓட்­டிச்­சென்று சசி­காந்த் மீது மோதி­ய­து­டன், காரின் அடி­யில் சிக்­கிக்­கொண்ட அவரை சில மீட்­டர் தூரம் இழுத்­துச் சென்­றார்.

பின்­னர் பந்­தா­ரி­நாத் அங்­கி­ருந்து தப்­பிச்­சென்ற நிலை­யில், விபத்தை நேரில் கண்­ட­வர்­கள் சசி­காந்தை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­ற­னர். தீவிர சிகிச்சை அளித்­தும் பல­னின்றி மறு­நாள் உயி­ரி­ழந்­தார் சசி­காந்த்.

இதை­ய­டுத்து குற்­ற­வா­ளியைக் கைது செய்ய வலி­யு­றுத்தி மகா­ராஷ்­டிர ஊட­க­வி­ய­லா­ளர்­கள் போராட்­டத்­தில் குதித்­துள்­ள­னர்.

பந்­தா­ரி­நாத் ஆளும் தரப்­புக்கு நெருக்­க­மா­ன­வர் என்று கூறப்­ப­டு­வதை மகா­ராஷ்­டிர அரசுத் தரப்பு மறுத்துள்ளது. சட்­டம் அதன் கடமை­யைச் செய்­யும் என மாநில அரசு தெரி­வித்­துள்­ளது.