செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e94e83d5-2b2d-44c0-8219-baacc10c91da
-

அரசுத்தேர்வில் முறைகேடு: ஆயுள் தண்டனை, ரூ.10 கோடி அபராதம்

இடாநகர்: அரசுப் பணிக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஆயுள் தண்டனையும் பத்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என உத்தராகண்ட் அரசு எச்சரித்துள்ளது. ஆள்சேர்ப்பு தேர்வுகளில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது அம்மாநில அரசு. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என புதிய சட்டம் தெரிவிக்கிறது. இதற்கு மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அதானி விவகாரம்: கண்காணிப்பு அமைப்புகள் ஆராய்கின்றன

புதுடெல்லி: அதானி குழுமம் மீதான புகார்கள் குறித்து நிதி கண்காணிப்பு அமைப்புகள் ஆராய்ந்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள் ளார். அந்த அமைப்புகள் தங்கள் பணியை தொடங்கி விட்டதாக ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டத்தில் பேசும் போது அவர் குறிப்பிட்டார். "நமது நிதி கண்காணிப்பு அமைப்புகள் அமைப்பு ரீதியான வலிமை, திறமை கொண் டவை. இதுபோன்ற விவகாரங்களைக் கையாளும் ஆற்றல் அந்த அமைப்புகளுக்கு உண்டு," என்றார் நிதியமைச்சர்.

13 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள்

புதுடெல்லி: அதிபர் திரௌபதி முர்மு 13 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி மகாராஷ்டிரா, சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஆந்திரா, மணிப்பூர், நாகலாந்து, சத்தீஸ்கர், பீகார், மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, மும்பை இடையேயான விரைவுச் சாலையின் ஒரு பகுதி திறப்பு

புதுடெல்லி: டெல்லி, மும்பை இடையேயான விரைவுச் சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலையின் முதல் பகுதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ரூ.12,150 கோடி செலவில் டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், லால்சாட் பகுதி வரையிலான பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியையும் வர்த்தக மையமான மும்பையையும் இணைக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி செலவில் 1,386 கிமீ தூரத்திற்கு டெல்லி-மும்பை விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.