புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏழ்மையும் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். அரசுக்கு எதிராகப் பேச துணிபவர்கள் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படுகிறார்கள் என்றார் கார்கே.
"கடந்த 2014ஆம் ஆண்டு பணவீக்கத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதைச் செய்யவில்லை.
"நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடியது. காங்கிரஸ் அரசு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியது. எனவே நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்," என்றார் கார்கே.

