பெங்களூரு: இந்தோ, பசிபிக் பகுதியை வலுப்படுத்த இந்தியாவும் அமெரிக்கமாவும் இணைந்து செயல்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற அமெரிக்க பிரதிநிதிகள் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் சுதந்திரம், வளத்துக்காக இரு நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
"ஜனநாயகம் செழிக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இணைந்துள்ளோம். உலகளாவிய சுகாதாரத்தை மேம்படுத்துதல், தொற்றுநோய்களுக்கு எதிராக தயார்நிலையில் இருத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
"மேலும், இணையம் சார்ந்த சவால்களில் ஒத்துழைக்கவும் தரமான உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன," என்றார் எலிசபெத் ஜோன்ஸ்.
இந்தியாவின் நம்பமுடியாத திறமையான இந்திய விஞ்ஞானிகள், பொறியியலாளர்களைக் கொண்டு அதிநவீன ஆராய்ச்சி, மேம்பாட்டு திட்டங்களுக்கான மையங்களை அமெரிக்கா நிறுவிஉள்ளது என்றும் இது தொடர்பாக பெரும் மூதலீடுகளைச் செய்துள்ளது என்றும் அமெரிக்க முதன்மை துணை பாதுகாப்பு செயலர் ஜெடிடியா பி.ராயல் தெரிவித்தார்.

