ஏர் இந்தியா, 'சேட்ஸ்' இணைந்து அமைக்கும் சரக்கு நடுவம்

ஏர் இந்தியா, 'சேட்ஸ்' இணைந்து அமைக்கும் சரக்கு நடுவம்

1 mins read
7485d342-3b44-47e8-93e0-560c6db4e1b5
-

புது­டெல்லி: சிங்­கப்­பூ­ரின் சேட்ஸ் (SATS) நிறு­வ­னம் இந்­தி­யா­வில் பல்­செ­யல்­வகை சரக்கு நடு­வம் (multimodal cargo hub) ஒன்­றைக் கட்­ட­வி­ருக்­கிறது.

சேட்ஸ்-ஏர் இந்­தியா நிறு­வ­னங்­க­ளின் கூட்­டு­நி­று­வ­ன­மான ஏஐ­சேட்ஸ் (AISATS) அந்த நடு­வத்தை வடி­வ­மைத்து, கட்டி, ஏற்று நடத்­த­வி­ருக்­கிறது.

யமுனா அனைத்­து­லக விமான நிலைய பிரை­வேட் லிமி­டெட் நிறு­வ­னம், இந்­தச் சரக்கு நடு­வத் திட்­டத்­திற்கு ஏஐ­சேட்ஸ் நிறு­வ­னத்­தைத் தேர்வு செய்­துள்­ளது.

அந்த ஐந்­த­டுக்­குப் பல்­செ­யல்­வகை சரக்கு நடு­வம், உத்­த­ரப் பிர­தே‌‌ச மாநி­லம், ஜேவ­ரில் அமை­ய­வி­ருக்­கும் நொய்டா அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் கட்­டப்­ப­ட­வி­ருக்­கிறது.

இது­போன்ற பல்­செ­யல்­வகை சரக்கு நடு­வம் இந்­தி­யா­வில் அமை­வது இதுவே முதன்­முறை.

கிட்­டத்­தட்ட 87 ஏக்­கர் நிலப்­பரப்­பில் அமை­யும் அந்­ந­டு­வம், ஒருங்­கி­ணைந்த சரக்கு முனை­யம், ஒருங்­கி­ணைந்த சேமிப்­புக் கிடங்கு, தள­வாட மண்­ட­லம் ஆகி­ய­வற்­றைக் கொண்­டி­ருக்­கும்.

வரும் வாரங்­களில் திட்­டத்­திற்­கான உடன்­பாடு இறுதி வடி­வம் பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தலை­ந­கர் புது­டெல்­லியை ஒட்­டிய பகு­தி­யான, பெரிய வர்த்­தக நக­ர­மாக வளர்ந்து வரும் நொய்­டா­வில் எதிர்­வ­ரும் 2024ஆம் ஆண்டு இறு­தி­யில் அந்த அனைத்­து­லக விமான நிலை­யத்­தைத் திறக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.