டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் சோதனை

டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் சோதனை

1 mins read
e4df8501-fc58-48b5-b7b8-e40637afead3
-

மும்பை: தலைநகர் டெல்லி, மும்­பை­யில் உள்ள பிபிசி தொலைக்­காட்சி அலு­வ­ல­கங்­களில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்திவரு­வ­தாக நேற்று தக­வல்­கள் வெளி­யாகின. அத்­து­டன், பிபிசி அலு­வ­ல­கங்­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­களின் கைப்பேசி­கள், மடிக்கணி­னி­கள் ஆகி­ய­வற்­றை­யும் அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

குஜ­ராத் கல­வ­ரம் தொடர்­பாக பிபிசி தொலைக்­காட்சி வெளி­யிட்ட ஆவ­ணப்­ப­டத்­தால் சர்ச்சை ஏற்­பட்ட நிலை­யில், அந்தப் படம் தொடர்­பான காணொளிகளை மத்­திய அரசு முடக்­கி­யது.

இந்நட­வ­டிக்­கைக்கு எதிர்க்­கட்­சி­கள் எதிர்ப்பு தெரி­வித்த நிலை­யில், பிபிசி அலு­வ­ல­கங்­களில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் அனைத்­து­லக வரி­வி­திப்பு உள்­ளிட்­டவை குறித்து சோதனை நடத்தி வரு­வ­தாக சொல்­லப்­படு­கிறது. அதே­நே­ரத்­தில் பிபிசி அலு­வ­ல­கத்­தின் கணக்கு வழக்கு புத்­த­கங்­க­ளைப் பரி­சோதிக்­கவே அதி­கா­ரி­கள் சென்­றுள்­ள­தா­க­வும் இது சோதனை நட­வ­டிக்கை அல்ல என்­றும் வரு­மான வரித்துறை அதி­கா­ரி­கள் வட்­டா­ரங்­கள் கூறி­யுள்­ளன.