பிபிசி அலுவலகத்தில் 2வது நாளாக மீண்டும் சோதனை

பிபிசி அலுவலகத்தில் 2வது நாளாக மீண்டும் சோதனை

2 mins read
d48fdfb0-8a34-4d53-a213-3431c960c59c
-

புது­டெல்லி: பிபிசி இந்­தியா அலு­வ­ல­கத்­தில் மீண்­டும் வரு­மான வரித்துறை­யி­னர் சோதனை நடத்­தி­னர்

டெல்லி, மும்­பை­யில் உள்ள பிபிசி அலு­வ­ல­கங்­களில் இரண்­டா­வது நாளாக நேற்று மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­களில் அந்­நி­று­வ­னத்­தின் நிதித் தரவு களை­யும் காகித ஆவ­ணங்­க­ளை­யும் ஆய்வு செய்­தனர் என்று அதி­கா­ரி­கள் கூறினர்.

கடந்த 2002-இல் நடந்த குஜ­ராத் கல­வ­ரம் குறித்த ஆவ­ணப் படத்தை பிபிசி அண்­மை­யில் வெளி­யிட்டு பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

அதில் பிர­த­மர் மோடிக்கு கல­வ­ரத்­தில் தொடர்பு இருப்­ப­து­போல காட்­டப்­பட்­டது.

இந்த நிலை­யில் பிபி­சி­யின் டெல்லி, மும்பை அலு­வ­ல­கங்­களில் வரு­மான வரித் துறை அதி­கா­ரி­கள் செவ்­வாய்க்­கி­ழமை முதல் சோதனையை நடத்­தி­னர்.

இரவு முழு­வ­தும் நீடித்த சோதனை இரண்­டா­வது நாளாக நேற்­றும் தொடர்ந்­தது.

பிபி­சி­யின் நிதி, இதர துறை ­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளி­டம் விசா­ரணை நடை­பெற்­றது.

சோத­னை­யின்­போது பிபிசி செய்­தி­யா­ளர்­கள், ஊழி­யர்­க­ளின் கைப்பேசி, மடிக்­க­ணி­னி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இதற்­கி­டையே அனைத்­து­லக வரி விதிப்பு, பிபிசி துணை நிறு­வ­னங்­க­ளின் பரி­வர்த்­தனை தொடர்­பாக இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

சோதனை குறித்து வரு­மான வரித் துறை அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு எத­னை­யும் வெளி­யி­ட­வில்லை.

பிபிசி நிறு­வ­னம் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் டெல்லி, மும்­பை­யில் உள்ள பிபிசி அலு­வ­ல­கங்­களில் வரு­மான வரித் துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்­து­வ­தா­க­வும் அவர்­க­ளுக்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளது.

பிபிசி நிறு­வ­னம் தனது ஊழி­யர்­க­ளுக்கு மின் அஞ்­சல் வழி­யாக தகவல் ஒன்றை அனுப்­பி­யி­ருப்­ப­தாகச் சொல்லப்படுகிறது.

அதில், "ஒளி­ப­ரப்­புத்­துறை ஊழி­யர்­க­ளைத் தவிர மற்ற துறை­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­கள் வீட்­டில் இருந்­த­ப­டியே வேலை செய்­ய­வும் தனிப்­பட்ட வரு­மா­னம் தொடர்­பான கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளிப்­பதை ஊழி­யர்­கள் தவிர்க்க வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

பிபி­சிக்கு எதி­ரான சோதனைகளுக்கு பல தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

காங்­கி­ரஸ் தலை­வர் மல்லி கார்­ஜுன கார்கே, "மோடி ஆட்­சி­யில் பத்­தி­ரிகை சுதந்­தி­ரத்தின் மீது மீண்­டும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்டு வரு­கிறது, விமர்சனக் குரல்­களை நசுக்­கு­வ­தற்­காக வெட்­கக்­கே­டான மற்­றும் மன்னிக்க முடி­யாத பழி­வாங்­க­லு­டன் இது செய்­யப்­ப­டு­கிறது," என்று கூறி­யுள்­ளார்.

ஆம் ஆத்மி கட்­சி­யின் எம்.பி சஞ்­சய் சிங், "மோதி சர்­வாதி காரம் உச்­சக்­கட்­டத்தை அடைந்து இருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழ்­நாடு முதல்­வர் மு.க. ஸ்டா­லின் தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "அம­லாக்­கத் துறை, சிபிஐ, வரு­மா­ன­ வ­ரித்துறை உள்­ளிட்ட இந்­திய அர­சின் அமைப்­பு­கள், அர­சி­யல் கரு­வி­க­ளாக அர­சி­யல் எதி­ரி­களை குறி­வைத்து தாக்க அள­வு­ க­டந்து பயன்­ப­டுத்­தப்­படுகின்­றன," என்றார்.

"இந்­தப் பட்­டி­ய­லில் பிபிசி நிறு­வ­னத்­தில் நடத்­தப்பட்ட வரு­மான வரி சோதனையும் இணைந்­துள்­ளது," என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிலை­யில் பிபிசி அலு வல­கத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­க­ளுக்­கும் அர­சுக்­கும் தொடர்பு இல்லை என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

"யாரும் சட்­டத்­திற்கு அப்­பாற் பட்­ட­வர்­கள் இல்லை, இந்த ஆய்வு முடிந்­த­பி­றகு அது குறித்த தகவல்­கள் வெளி­யி­டப்­படும்," என்று இந்­திய தக­வல் மற்­றும் ஒலிபரப்­புத்­துறை அமைச்­சரான அனு­ராக் தாக்­கூர் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக் கின்றன.