சென்னை: இந்தியாவிலிருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பல தொல் பொருள்கள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கிட்டத்தட்ட 307 சிலைகள் இந்தியாவில் ஒப்படைக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
தொல்பொருள்களை ஆய்வு செய்ய இந்தியாவிலிருந்து குழு ஒன்று அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொல்பொருள்கள் இந்தியாவை வந்தடைய ஓராண்டு ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
500 ஆண்டுகள் பழமையான வெண்கல ஆஞ்சநேயர் சிலை, எட்டாம் நூற்றாண்டுக்கும் 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் செதுக்கப்பட்ட கௌதம புத்தர் சிலை, பளிங்குத் தூண் ஒன்று, வாள் ஒன்று போன்ற தொல்பொருள்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து திருடப் பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.