தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு புதிய தலைவர்; ஆலோசனை

தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு புதிய தலைவர்; ஆலோசனை

1 mins read
aee64333-1b9a-428e-aef5-f9683cdccaff
திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவில் நிர்­வா­கத்தை நிர்­வ­கிக்­கும் தேவஸ்­தான அறங்­கா­வ­லர் குழு­வின் தலை­வ­ராக கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக சுப்பா ரெட்டி இருந்து வரு­கி­றார். படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா -

திருப்­பதி: திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவில் நிர்­வா­கத்தை நிர்­வ­கிக்­கும் தேவஸ்­தான அறங்­கா­வ­லர் குழு­வின் தலை­வ­ராக கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக சுப்பா ரெட்டி இருந்து வரு­கி­றார்.

அவ­ரது பதவிக் காலம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறை­வ­டைந்­தது. ஆனால் அவர் மீண்­டும் தலை­வ­ராக பதவி ஏற்­றார். இந்த நிலை­யில் அறங்­கா­வ­லர் குழுத் தலை­வரை மாற்ற ஜெகன்­ மோ­கன் ரெட்டி முடிவு செய்­துள்­ளார்.

அறங்­கா­வ­லர் குழுத் தலை­வர் பத­விக்கு திருப்­பதி எம்.எல்.ஏ கரு­ணா­க­ர­ரெட்டி அல்­லது கங்கா கிருஷ்­ண­மூர்த்தி யாதவ் ஆகி­யோர் தேர்வு செய்­யப்­ப­ட­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது. இந்த நிலை­யில் திரு­ம­லை­யில் உள்ள அன்­ன­மைய்ய பவ­னில் அறங் காவ­லர் குழு உறுப்­பி­னர்­கள் மற்­றும் அதி­கா­ரி­கள் நேற்று ஆலோ­சனை நடத்­தி­னர்.