இந்தியா மிகப் பெரிய பொருளியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும்

இந்தியா மிகப் பெரிய பொருளியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும்

2 mins read
a28be3ac-ef47-47f4-b36f-e512f8722716
-

2023 விண்­வெ­ளிக் கண்­காட்சியில் இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்து

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தின் தலை­ந­க­ரான பெங்­க­ளூ­ரு­வில் 'விண்­வெ­ளிக் கண்­காட்சி 2023' நடை­பெற்று வரு­கிறது.அந்தக் கண்காட்சி நிகழ்வில் இந்­தி­யா­வில் தயார் செய்­யப்­பட்ட ராணு­வத் தள­வா­டங்­களை வாங்­கு­வ­தற்­குப் பல்­வேறு நாடு­கள் ஒப்­பந்­தம் மேற்­கொண்­டன.

இந்­நி­கழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங், "பாது­காப்­புக்­கான அனைத்­து­லக நிறு­வ­னங்­க­ளுக்கு இணை­யாக இந்­திய தற்­காப்­புத் துறை முன்­னேறி வரு­வதை இந்த விண்­வெளிக் கண்­காட்சி பறை­சாற்­று­கிறது. இந்­தக் கண்­காட்சி நிகழ்­வில் மேற்­கொள்­ளப்­பட்ட விற்­பனை மற்­றும் தொழில்­நுட்­பப் பரி­மாற்ற ஒப்­பந்­தங்­கள் இந்­திய தற்­காப்­புத் துறைக்கு புதிய துவக்­கத்தை அளித்­துள்­ளன. இதன் மூலம் தற்­சார்பு இந்­தி­யா­வின் புதிய யுகம் தொடங்­கி­யுள்­ளது," என்­றார் அமைச்­சர் ராஜ்­நாத் சிங்.

"அடுத்த நிதி ஆண்டு முதல் ராணு­வத்­திற்­கான தேவை­யில் 75% உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­டம் இருந்தே கொள்­மு­தல் செய்­யப்­படும். உள்­ளூர் உற்­பத்­தி­யா­ளர்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது," என்று அமைச்­சர் ராஜ்­நாத் சிங் தெரி­வித்­தார்.

மேலும் அவர் கூறு­கை­யில், "அடுத்த 25 ஆண்­டு­களில் மிகப் பெரிய பொரு­ளா­தார சக்­தி­யாக இந்­தியா உரு­வெ­டுக்க வேண்­டும் என்­ப­தும், அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்­பத்­தில் உல­கின் முன்­னணி நாடாக வேண்­டும் என்­ப­தும்­தான் இந்­தி­யா­வின் இலக்கு. எனவே, பழைய அணு­கு­மு­றை­களில் இருந்து மாறி புதிய கண்டு­பிடிப்­பு­க­ளின் துணை­யு­டன் நாம் வளர்ச்­சியை நோக்கி முன்­னேற வேண்­டும்," என அவர் வலி­யுறுத்­தி­னார்.

மத்­திய அர­சின் பொதுத்­துறை நிறு­வ­னங்­கள் உள்­பட பல்­வேறு ராணு­வத் தள­வாட உற்­பத்தி நிறு­வ­னங்­கள் இடையே 201 ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளன.

"உள்­ளூர் நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில், உள்­நாட்டு ராணுவ உற்­பத்­தித் தள­வா­டக் கொள்­மு­த­லுக்­காக வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் நூறா­யி­ரம் கோடி நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது," என்று தெரி­வித்­தார்.

"இயன்­ற­வரை நாட்­டுக்­குத் தேவை­யான ராணு­வத் தள­வா­டங்­களை உள்­நாட்­டி­லேயே உற்­பத்தி செய்­ய­வும், இறக்­கு­ம­தி­யைக் குறைத்து, தற்­காப்­புத்­து­றையை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு எப்­போ­தும் இல்­லாத வகை­யில் இந்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

"ராணு­வத் தள­வாட உற்­பத்­தி­யில் தன்­னி­றைவு அடை­வ­தன் மூலம் நமது பொரு­ளா­தா­ர­மும் வலு­வ­டை­யும். அதற்காக, ராணு­வத் தள­வா­டங்­களை உற்­பத்தி செய்ய உள்­நாட்டு நிறு­வ­னங்­களுக்கு ஏரா­ள­மான வாய்ப்­பு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நமது நாட்­டின் தேவை­யைப் பூர்த்தி செய்­வ­து­டன் இந்­தி­யா­வின் நட்பு நாடு­க­ளின் ராணு­வத் தேவை­களை­யும் பூர்த்தி செய்­ய­மு­டி­யும் என்­றார் அமைச்­சர் ராஜ்­நாத் சிங்.