செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
9eed05ff-59ae-4b64-806b-a2160c5590c8
-

தேசிய பழங்­கு­டி­யின திரு­விழா

புது­டெல்லி: நாட்­டின் வளர்ச்சி மற்­றும் முன்­னேற்­றத்­தில் பங்­காற்­றிய பழங்­குடி மக்­க­ளைக் கௌர­விக்­கும் வகை­யில் நேற்று மகா தேசிய பழங்­கு­டி­யின திரு­விழா தொடங்­கப்­பட்­டது. டெல்­லி­யில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய அரங்­கத்­தில் இந்த விழா தொடங்கி வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்ச்­சி­யில் பழங்­குடி கலா­சா­ரம், கைவி­னைப் பொருள்­கள், உண­வுப் பொருள்கள், வர்த்­த­கம் மற்­றும் பாரம்­ப­ரிய கலை ஆகி­யவை காட்­சிப்­ப­டுத்­தப்­பட உள்­ளன. இந்­நி­கழ்ச்­சி­யா­னது மத்­திய பழங்­கு­டி­யின விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­கம் சார்­பில் நேற்று தொடங்கி பிப்­ர­வரி 27ஆம் தேதி வரை நடத்­தப்­ப­டு­கிறது. நிகழ்ச்­சி­யில் 200 கடை­கள் அமைக்­கப்­படும். இந்த திரு­விழா நிகழ்­வில் ஆயி­ரக்­க­ணக்­கான பழங்­கு­டி­யி­னக் கலை­ஞர்­கள் பங்­கு­பெற்று நிகழ்ச்சி படைப்­பர்.

மாநி­லங்­கள் சம்­ம­தித்­தால் பெட்­ரோ­லிய பொருள்களின் விலையை குறைக்கலாம்

புது­டெல்லி: பெட்­ரோ­லியப் பொருள்­கள், மது­பா­னம் போன்ற சில பொருள்­கள் இன்­னும் பொருள் சேவை வரி வரம்­புக்­குள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. முன்பு போலவே, உற்­பத்தி வரி, உபரி வரி உள்­ளிட்ட வரி­கள்­தான் விதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. பெட்­ரோ­லியப் பொருள்­க­ளின் விலை­யைக் குறைக்க அவற்றை பொருள் சேவை வரி வரம்­புக்­குள் கொண்­டு­வர வேண்­டும் என்ற கோரிக்­கையை பல­த­ரப்­பி­ன­ரும் மத்­திய அர­சுக்கு வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். இதற்­குப் பதி­ல­ளித்த நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் "மாநில அர­சு­கள் சம்­ம­தம் தெரி­வித்­தால், பெட்­ரோ­லியப் பொருள்­களை ஜி.எஸ்.டி. வரம்­புக்­குள் கொண்­டு­வர முடி­யும். மின்­சா­ரம் உள்­ளிட்ட துறை­களில் சீர்­தி­ருத்­தங்­கள் மேற்­கொள்­ளு­மாறு மாநில அர­சு­களை வலி­யு­றுத்­தி­யும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்­டத்தை அமல்­ப­டுத்­து­மாறும் கூறி வரு­கி­றோம்," என்று கூறி­யுள்­ளார்.

திரு­மண நாட­கம்: நகை­க­ளு­டன்

ஓட்­டம் பிடித்த மணமகள்

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் கோரக்­பூர் பகு­தி­யில் வசிக்­கும் குடியா என்ற பெண்­ணுக்­கும் ராஜஸ்­தான் மாநி­லத்­தின் அஜ்­மீ­ரில் வசிக்­கும் அங்­கித் என்ற ஆட­வ­ருக்­கும் கடந்த பிப்­ர­வரி 6ஆம் தேதி உத்­த­ரப் பிர­தே­சத்­தின் சந்­த­வுலி மாவட்­டத்­தில் திரு­ம­ணம் நடந்­தது. திரு­ம­ணம் முடிந்­த­தும் மாப்­பிள்­ளை­யின் சொந்த ஊரான அஜ்­மீ­ருக்கு ரயி­லில் பய­ணம் செய்­த­னர். ரயி­லில் ஆட்­டம் பாட்­டம் என மகிழ்ச்­சி­யாக பய­ணம் செய்­வ­தர்­க­ளுக்கு பெண்­ணின் தோழி ஒரு­வர், மயக்க மருந்து கலந்த உணவு பரி­மா­றி­னாள். அனை­வ­ரும் மயக்­க­நி­லை­யில் இருந்­த­போது, அவர்களிடம் இருந்து பணம், நகை­க­ளைச் சுருட்­டிக்­கொண்டு பெண் வீட்­டார் ரயி­லில் இருந்து தப்பி ஓடி­னர். நினைவு திரும்­பி­ய­தும் தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த மாப்­பிள்ளை வீட்­டார் காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­த­னர். புகா­ரின் அடிப்­ப­டை­யில் காவல்­து­றை­யினர், மணப்­பெண் குடியா மற்­றும் உடந்­தை­யாக இருந்த அவ­ரது தோழி ஆகி­யோரை வார­ணா­சி­யில் கைது செய்­தனர்.

என்.டி.ராமாராவ் உருவம் பொறித்த

ரூ.100 வெள்ளி நாணயம்

ஹைதராபாத்: மறைந்த நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டையொட்டி, விரைவில் அவரது உருவப்படம் பொறித்த ரூ.100 வெள்ளி நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.

என்.டி. ராமாராவ் திரைப்படத் துறையில் கால்பதித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். பின்னர், 1982ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் எனும் கட்சியைத் தொடங்கி, வெறும் 9 மாதங்களில் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆட்சியைப் பிடித்து கின்னஸ் சாதனை புரிந்தார். 1983ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை நடத்திய என்.டி.ராமாராவ் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தினார்.