மது குடிக்கும் போட்டியில் மயங்கியவர் எழவே இல்லை

மது குடிக்கும் போட்டியில் மயங்கியவர் எழவே இல்லை

1 mins read
16974d8c-1cb0-4bbb-a581-ac234f3185df
-

ஆக்ரா: உத்­தர பிர­தேச மாநி­லம் ஆக்­ரா­வி­லுள்ள தாண்­டுப்­புரா பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஜெய் சிங் (45). இ-ரிக்‌ஷா ஓட்டுநரான ஜெய் சிங் கடந்த 8ஆம் தேதி தனது நண்­பர்­கள் போலா, கேசவ் ஆகி­யோ­ரு­டன் மது குடித்­துள்­ளார்.

அப்­போது மூன்று பேருக்­கும் இடையே போட்டி ஏற்­பட்­டுள்­ளது. 10 நிமி­டங்­களில் மூன்று புட்டி மதுவை (540 மி.லி. மது) குடிக்க முடியுமா என்று ஜெய் சிங்­கி­டம் அவர்­கள் சவால் விட்­டுள்­ள­னர்.

இந்த சவாலை ஏற்ற ஜெய் சிங் மூன்று புட்டி மதுவை பத்து நிமி­டங்­களில் குடித்­துள்­ளார். குடித்து முடித்­த­தும் அவர் மயங்கி விழுந்­துள்­ளார்.

மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்­கெ­னவே இறந்துவிட்­ட­தாக மருத்துவர்கள் தெரி­வித்­த­னர். இதை­ய­டுத்து காவல்துறை அதிகாரிகள் விசா­ரணை நடத்தி போலா, கேசவ் ஆகி­யோரை கைது செய்­துள்­ள­னர். இது­கு­றித்து தாஜ்­கஞ்ச் காவல் நிலைய அதி­காரி பக­தூர் சிங் கூறும்­போது, "மது­வால் உயி­ரி­ழந்த ஜெய் சிங்­குக்கு 3 மகன்­கள், ஒரு மகள் உள்­ள­னர். தொடர்ந்து விசா­ரணை நடத்தி வரு­கி­றோம்" என்­றார்.

ஜெய் சிங்­கின் தம்பி சுக்­பிர் சிங் கூறும்­போது, "போலா, கேசவ் ஆகி­யோர் எனது சகோ­த­ரர் ஜெய்­சிங்­கு­டன் 10 ஆண்­டு­க­ளாக பழகி வரு­கின்­ற­னர். அவ­ரி­ட­மி­ருந்து ரூ.6,000க்கு மேல் அவர்­கள் கடன் பெற்­றுள்­ள­னர். தற்­போது அவர் இறந்­த­தும் எங்­கள் மீது புகார் செய்­யா­தீர்­கள் என்று புலம்­பு­கின்­ற­னர்,'' என்­றார்.