கடவுச்சீட்டு சரிபார்க்கும் இணையச் சேவை தொடக்கம்

கடவுச்சீட்டு சரிபார்க்கும் இணையச் சேவை தொடக்கம்

1 mins read
5af43133-74ff-4725-8b93-172018f4fb02
-

புது­டெல்லி: கட­வுச்­சீட்டு (பாஸ்­போர்ட்) சரி­பார்ப்பு தொடர்­பாக தொடங்­கப்­பட்­டுள்ள இணை­யச் சேவைத் திட்­டம் மக்­கள் சந்­திக்­கும் பிரச்­சி­னை­களை பெரு­ம­ளவு குறைக்­கும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தெரி­வித்­துள்­ளார்.

டெல்லி காவல்­துறை தொடங்­கப்­பட்டு 76 ஆண்­டு­கள் நிறை­வ­டைந்­த­தை­யொட்டி நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில், கட­வுச் சீட்டு சரி­பார்த்­தல் தொடர்­பான இணை­யச் சேவை­க­ளை­யும் டெல்­லி­யில் நட­மா­டும் தட­ய­வி­யல் வாக­னங்­க­ளை­யும் அவர் தொடங்கிவைத்­தார்.

அத்­து­டன், தேசிய தட­ய­வியல் அறி­வி­யல் வளா­கத்­தை­யும் திறந்­து­வைத்­தார்.

இந்த நிகழ்­வில் பேசிய அமைச்­சர் அமித்ஷா, "தற்­போதைய நடை­முறை மூலம் கட­வுச்­சீட்டு சரி­பார்த்­தல் முறை 15 நாள்க­ளுக்­குப் பதி­லாக ஐந்து நாள்­களில் நிறை­வு­பெறும்," எனத் தெரி­வித்­தார்.

"கட­வுச்­சீட்டு பெறு­வ­தற்­கான விண்­ணப்­பங்­கள் நாளொன்­றுக்கு சரா­ச­ரி­யாக 2,000 வரை அனு­ம­திக்­கப்­பட்டு வந்த நிலை­யில், இந்­தச் சேவை மக்­கள் சந்­திக்­கும் பிரச்­சினை­களைப் பெரு­ம­ளவு குறைக்­கும்," என்­றார்.

இந்­திய தண்­ட­னைச் சட்­டம், குற்ற விசா­ரணை முறைச் சட்­டம், ஆதார் ஆவ­ணச் சட்­டம் போன்­ற­வற்­றில் மத்­திய அரசு மிகப்­பெ­ரிய மாற்­றத்­தைக் கொண்டு வர உள்­ள­தா­க­வும் அமித்ஷா குறிப்­பிட்­டுள்­ளார்.

டெல்­லி­யில் ஜி20 மாநாட்டு நிகழ்ச்­சி­க­ளுக்கு அனைத்­து­லக பிர­தி­நி­தி­கள் வரு­வ­தால், காவ­லர்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும் என்­றும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.