பிபிசி அலுவலகங்களில் சோதனை நிறைவு

பிபிசி அலுவலகங்களில் சோதனை நிறைவு

2 mins read
c8e34613-6463-4b9e-85aa-93b25fd0dfbc
-

மும்பை: பிபிசி ெசய்தி நிறு­வ­னத்­தின் டெல்லி, மும்பை அலு­வ­ல­கங்­களில் நடை­பெற்று வந்த வரு­மான வரித்­துறை சோதனை 60 மணி நேரத்­திற்­குப் பிறகு நிறை வடைந்­தது.

லண்­ட­னைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு செயல்­படும் பிபிசி செய்தி நிறு­வ­னத்­தின் டெல்லி, மும்பை அலு­வ­ல­கங்­களில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை முதல் வரு­மான வரித்­துறை சோதனை தொடங்­கி­யது.

அலு­வ­ல­கத்­தில் நுழைந்­த­துமே அங்­கி­ருந்த ஊழி­யர்­க­ளின் கைப்­பே­சி­கள், மடிக்­க­ணி­னி­க­ளைப் பறி­மு­தல் செய்த அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்­த­னர்.

அத­னைத்­தொ­டர்ந்து பிபிசி அலு­வ­ல­கத்­தின் பணப் பரி­வர்த்­த­னை­கள் குறித்த மின்­னணு, காகித ஆவ­ணங்­களை அவர்­கள் சேக­ரித்­த­னர்.

அனைத்­து­லக வரி­வி­திப்பு, துணை நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­தது தொடர்­பாக வரு­மான வரித் துறை­யி­னர் விசா­ரணை நடத்­தி­னர்.

ஏறத்­தாழ 60 மணி நேரத்­திற்­கும் மேலாக நடை­பெற்ற சோதனை வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ர­வில் நிறை­வ­டைந்­தது.

எனி­னும், வரு­மான வரித்­துறை சார்­பில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளியாகவில்லை.

கடந்த 2002ல் குஜ­ராத் கல­வ­ரத்­தைக் கட்­டுக்­குள் கொண்­டு­வர அப்­போ­தைய குஜ­ராத் மாநில முதல்­வ­ரும் இப்­போ­தைய பிர­த­ம­ரு­மான நரேந்­திர மோடி நட­வடிக்கை எடுக்­க­வில்லை என பிபிசி வெளி­யிட்ட ஆவ­ணப் படமே இந்­தச் சோத­னை­க­ளுக்கு முக்­கிய கார­ணம் என எதிர்க்­கட்­சி­கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன.

"கருத்து சுதந்­தி­ரத்­தைப் பாதிக்­கும் செயல்," என பல்­வேறு தரப்­பி­ன­ரும் மத்­திய பாஜக அர­சுக்­குக் கண்­ட­னம் தெரி­வித்­திருப்­பது குறிப்­பிடத்­தக்­கது.

இத­னி­டையே பிபிசி நிறு­வ­னம் அளித்­துள்ள விளக்­கத்­தில், "மூன்று நாள் சோதனையில் சில பணி­யா­ளா்­கள் இர­வும் பக­லும் அலு­வ­ல­கத்­தில் தங்­கி­யிருக்க நேரிட்­டது. யாருக்­கும் அஞ்­சா­மலும் யாருக்­கும் ஆத­ரவு தராமலும் தொடா்ந்து செய்­தி­கள் வழங்­கப்­படும்," என்று தெரி­வித்­துள்­ளது.