'பரிசுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடியாது'

'பரிசுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடியாது'

1 mins read
66dcc898-3830-4c9d-bcec-58397679426b
-

பெங்­க­ளூரு: பரிசுப் பொருள்­கள், 'கேஷ் பேக்', 'மின் பற்­றுச்­சீட்டு' ஆகிய வற்­றுக்கு சரக்கு மற்­றும் சேவை வரி விதிப்­பது சாத்­தி­ய­மில்லை. இவை அனைத்­தும் சரக்கு மற்­றும் சேவை வரிக்கு உட்­பட்டு வரு­வ­தில்லை. எனவே பரிசுப் பொருட்­கள், பரிசு கூப்­பன்­க­ளுக்கு சரக்கு மற்­றும் சேவை வரி விதிக்க இய­லாது என்று கர்­நா­டக உயர் நீதி­மன்­றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பெங்­க­ளூ­ரு­வில் உள்ள ஒரு தனி­யார் நிறு­வ­னத்­திற்கு பரிசுப் பொருட்­கள், கூப்­ப­னுக்கு சரக்கு மற்­றும் சேவை வரி விதிக்­கப்­பட்­டதை எதிர்த்து கர்­நா­டக உயர் நீதி­மன்­றத்­தில் அந்த நிறு­வ­னம் சார்­பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனை ஏற்­றுக் கொண்டு நீதி­பதி தீர்ப்பு வழங்­கி­யுள்­ளார்.