இந்தியாவுக்கு மேலும் 12 சிறுத்தைகள்

இந்தியாவுக்கு மேலும் 12 சிறுத்தைகள்

1 mins read
1e273b3a-811d-45a5-812b-4340878543f2
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் சிறுத்தை இனம் ஏறக்­கு­றைய அழிந்­து­விட்­ட­தால் ஆப்­பி­ரிக்க நாடான நமீ­பி­யா­வு­டன் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்டு அந்­நாட்­டில் இருந்து எட்டு சிறுத்­தை­கள் இந்­தி­யா­வுக்­குக் கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் கொண்டு வரப்­பட்­டன. இந்­தச் சிறுத்­தை­களை பிர­த­மர் மோடி, மத்­திய பிர­தே­சத்­தின் குனோ-பல்­புர் தேசியப் பூங்­கா­வில் திறந்­து­விட்­டார். இந்த நிலை­யில் தென்­ஆப்­பி­ரிக்­கா­வில் இருந்து 12 சிறுத்­தை­களை இந்­தி­யா­வுக்கு கொண்டு வர மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுத்­தது. அதன்­படி இந்­திய விமான படை­யின் சி-17 ரக விமா­னம் சிறுத்­தை­ க­ளு­டன் நேற்று காலை 10 மணிக்கு மத்­திய பிர­தே­சத்­தின் குவா­லி­யர் விமா­னப்­படை தளத்­தில் தரை இறங்­கி­யது.