தமிழகத்தில் புதிய மின் கார், மின்கலன் தொழிற்சாலை

தமிழகத்தில் புதிய மின் கார், மின்கலன் தொழிற்சாலை

2 mins read
3e39016f-974a-483a-96a1-c2020741c690
-

ரூ.7,614 கோடி முதலீடு செய்கிறது 'ஓலா' நிறுவனம்

சென்னை: மின்­வா­கன உற்­பத்தி, மின்­க­லன் உற்­பத்தி ஆகி­ய­வற்­றுக்­கான தொழிற்­சா­லை­களை அமைப்­ப­தன் தொடர்­பில் 'ஓலா எலெக்­ட்­ரிக் மொபி­லிட்டி' நிறு­வனத்­து­டன் தமி­ழக அர­சாங்­கம் ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டுள்­ளது.

கிருஷ்­ண­கிரி மாவட்­டம் போச்­சம்­பள்­ளி­யில் உள்ள சிப்­காட் தொழிற்­பூங்­கா­வில் 7,614 கோடி ரூபாய் முத­லீட்­டில் இந்த ஆலை­களை ஓலா நிறு­வ­னம் அமைக்க உள்­ளது.

இதன் மூலம் 3,000க்கு மேற்­பட்­டோ­ருக்கு வேலை வாய்ப்பு கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தமி­ழ­கத்தை இந்­தி­யா­வின் மின்­வா­க­னத் தலை­ந­க­ராக நிலைப்­ப­டுத்­தும் முயற்­சி­களை மாநில அர­சாங்­கம் மேற்­கொண்டு வரு­கிறது.

சில நாள்­க­ளுக்கு முன்­பாக மின்­வா­க­னத் தொழிற்­சா­லை­கள் தொடர்­பில் 50,000 கோடி ரூபாய் வரை­யி­லான முத­லீ­டு­களை ஈர்ப்­பது தொடர்­பான மின்­வா­க­னக் கொள்­கையை தமி­ழக அர­சாங்­கம் அறி­வித்­தது. இதன் மூலம் மாநி­லத்­தில் 150,000 வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது அதன் இலக்கு.

இவ்­வே­ளை­யில் ஓலா நிறு­வ­னத்­து­ட­னான புரிந்­து­ணர்­வுக் குறிப்­பு­கள் கையெ­ழுத்­தாகி இருக்­கின்­றன.

ஓலா எலெக்ட்­ரிக் மொபி­லிட்டி நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­னங்­க­ளான ஓலா செல் டெக்­னா­ல­ஜிஸ், ஓலா எலெக்ட்­ரிக் டெக்­னா­ல­ஜிஸ் இரண்­டும் முத­லீடு செய்­கின்­றன.

அடுத்த ஐந்து ஆண்­டு­களில், ஓலா செல் டெக்­னா­ல­ஜிஸ் ரூ.5,114 கோடி­யும் ஓலா எலெக்ட்­ரிக் டெக்­னா­ல­ஜிஸ் ரூ.2,500 கோடி­யும் முத­லீடு செய்­யும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய தொழிற்­சா­லை­க­ளின் மூலம் 20 கிகா­வாட் மின்­க­லன் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­து­டன் ஆண்­டுக்கு 140,000 மின்­கார்­கள் உற்­பத்தி செய்­யப்­படும் எனக் கூறப்­பட்­டது. முத­லீட்­டுத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தோடு தமிழ்­நாட்­டில் மின்­வா­க­னப் பயன்­பாட்டை ஊக்­கு­விக்­கும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் அர­சாங்­கம் மேற்­கொண்­டு­வ­ரு­கிறது.

மின்­வா­க­னங்­க­ளுக்கு சாலை வரி­யி­லி­ருந்து முழு விலக்கு தரு­வ­தும் இவற்­றில் அடங்­கும்.

ஏத்­தர் எலெக்­ட்­ரிக், ஓலா எலெக்­ட்­ரிக் போன்ற நிறு­வ­னங்­கள் தொழிற்­சா­லை­களை அமைக்­கும் நிலை­யில், தமிழ்­நாடு மின்­வா­கன உற்­பத்தி நடு­வ­மாக உரு­மாற்­றம் கண்­டுள்­ளது.