3,500 மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு சாதனை

3,500 மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு சாதனை

1 mins read
a5bbf0ad-be34-4421-8524-1a08d5d4a9e6
-

செங்­கல்­பட்டு: இந்­தி­யா­வின் முதல் 'ஹைபி­ரிட்' வகை ராக்­கெட் வெற்­றி­க­ர­மாக விண்­ணில் ஏவப்­பட்­டது. 150 சிறிய ரக செயற்­கைக் கோள்­களை இந்த ராக்­கெட் சுமந்து சென்­றது. இந்த செயற்­கைக்­கோள்­க­ளைத் தயா­ரிக்­கும் குழு­வில் 3,500 அர­சுப் பள்ளி மாண­வர்­கள் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் உள்ள பட்­டிப்­பு­லம் கிரா­மத்­தில் இருந்து இந்த ராக்­கெட் ஏவப்­பட்­டது என்­றும் எந்­தச் சிக்­க­லும் இன்றி இந்­தத் திட்­டம் செயல்­படுத்­தப்­பட்­டது என்­றும் நிபு­ணர்­கள் தெரி­வித்­த­னர்.

'ஹைபி­ரிட்' வகை ராக்­கெட் குறைந்த உய­ரத்­தில் பறக்­கக் கூடி­யவை. செயற்­கைக்­கோள்­க­ளின் செயல்­பா­டு­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும் அவை தொடர்­பான தர­வு­க­ளைச் சேக­ரிக்­க­வும் இந்த ராக்­கெட்­டு­கள் பயன்­ப­டு­கின்­றன.

"நாடு முழு­வ­தும் உள்ள 20 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் செயற்­கைக்­கோள்­களை உரு­வாக்­கும் திட்­டத்­தில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டது இதுவே முதல் முறை.

"இதன் மூலம் கிடைத்த அனு­ப­வம் மாண­வர்­க­ளின் எதிர்­கால முயற்­சி­க­ளுக்கு நல்ல தூண்­டு­கோ­லாக அமை­யும்," என்று 'ஹைபி­ரிட்' ராக்­கெட் திட்­டத்­தில் பங்­கேற்ற நிபு­ணர்­கள் தெரி­வித்­த­னர்.