11வது குழந்தைக்குப் பிறகு கருத்தடை செய்த மனைவியை துரத்தியடித்த கணவர்

11வது குழந்தைக்குப் பிறகு கருத்தடை செய்த மனைவியை துரத்தியடித்த கணவர்

2 mins read
449f4715-8ffd-4997-b1c3-9f9cae5f1881
-

கியோன்­ஞார்: ஒடிஷா மாநி­லத்­தின் கியோன்­ஞ­ாரில் புஹு­யான் பழங்­குடி இனத்­தைச் சேர்ந்த ஒரு பெண் 11வது குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த பிறகு கருத்­தடை செய்து கொண்­டார்.

இத­னால் ஆவேச­ம­டைந்த கண­வர் அவரை குழந்­தை­க­ளு­டன் துரத்­தி­ய­டித்­து­விட்­டார்.

பச்­சி­ளம் குழந்­தைகளுடன் ஜானகி என்ற அந்­தப் பெண் மரத்­த­டி­யில் இருப்­ப­தைக் கண்ட 'ஆஷா' எனும் சமூக சேவை அமைப்­பைச் சேர்ந்தவர்கள் சனிக்­கி­ழமை அன்று அவரை மருத்­து­வம­னை­யில் சேர்த்­துள்­ளார். ஜான­கி­யும் குழந்­தை­களும் மூன்று நாட்­க­ளாக மரத்­த­டி­யில் இருந்­துள்­ளனர்.

இது பற்றி அவ­ரது கண­வர் டெஹி­ரி­யி­டம், 40, கேட்­ட­போது கருத்­தடை செய்­தால் பாரம்­ப­ரிய சடங்­கு­களில் தனது மனைவி பங்­கேற்க முடி­யாது என்­றார்.

ஜான­கிக்கு ஜன­வரி 19ஆம் தேதி குழந்தை பிறந்­தது. இதன் பிறகு ஆஷா சமூக சேவ­கர்­கள் அறி­வு­றுத்­தி­ய­தால் அவர் பிப்­ர­வரி 14ஆம் தேதி டெல்­கோய் மருத்து­வம­னை­யில் கருத்­தடை செய்­து­கொண்­டார்.

நாள் கூலி செய்­து­வ­ரும் டெஹிக்­கும் ஜான­கிக்­கும் 12 ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரு­ம­ணம் நடை­பெற்­றது. அவர்­க­ளுக்கு 11 குழந்­தை­கள் இருக்­கின்­றன.

ஐந்து ஆண் குழந்­தை­கள், ஆறு பெண் குழந்­தை­கள். சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை இறந்­து­விட்­டது.

ஜான­கிக்கு மறு­வாழ்வு அளிக்க ஏற்­பாடு செய்­யப்­படும். பல முறை முயற்சி செய்­தும் அவ­ரது கண­வர் கருத்­த­டைக்கு ஒத்­துக்­கொள்ளவில்லை என்று 'ஆஷா' அமைப்­பின் பிஜே லக்‌ஷ்மி சாஹு தெரி­வித்­தார்.

இந்த நிலை­யில் 'ஆஷா' ஊழி­யர்­கள் தனது சம்­ம­த­மின்றி மனை­விக்கு கருத்­தடை செய்­து­விட்­ட­தாக புகார் தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் அடிக்கடி கர்ப்ப மடைவதால் தாயாரின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது என்று அவ்வட்டார மருத்துவர்கள் கூறி யுள்ளனர்.