போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடனான விவாகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தாகர்கானின் சொத்துகள் தொடர்பாக 2 மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அஞ்சும் 3 பேருடன் சேர்ந்து தாகர்கானின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஹூமாகானுடன் அவர் சண்டை போட்டுள்ளார். சத்தம் கேட்டு தாகர்கான் வெளியே வந்தார். அப்போது அவர்களுக்கிடையே நடந்த தகராற்றில் தாகர்கான் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் காயம் அடைந்த அவரும், அவரது 2-வது மனைவியும் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் எனத் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.
சொத்து தகராற்றில் மனைவியர் இருவர்: கலகத்தில் கணவர் மீது துப்பாக்கிச்சூடு
1 mins read
-

