புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தணை வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் நிலக்கரி வரி விதிப்பு முறைகள் தொடர்பாக சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகள், அலுவலங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
பிலாய் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால் உள்ளிட்டோருக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு வருகிற 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தருணத்தில் சோதனை நடை பெற்றுள்ளது. அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது. மூன்றாம் தர அரசியலுக்கு இது உதாரணம் என்று அது கூறியது. மேலும், இது நாட்டுப் பிரச்சினை களில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்றும் அது வர்ணித்தது.

