புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு வில் இளைய தலைமுறையின ருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரு மான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளாா்.
காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு இம்மாதம் 24ஆம் தேதி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில், காங் கிரஸ் செயற்குழு உறுப்பினர் களில் 50 விழுக்காட்டினர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
"அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்றிணைய வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையை உறுதிப் படுத்தவேண்டும்," என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

