தேர்வு எழுத இரு கி.மீ. தூரம் ஓடிய மாணவிகள்

தேர்வு எழுத இரு கி.மீ. தூரம் ஓடிய மாணவிகள்

1 mins read
9f8550b9-d076-4646-9c7e-5a4d43247546
-

பாட்னா: பீகார் மாநிலத்தின் கைமுர் நகரில் மெட்ரிகுலேசன் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளின் பேருந்து நேற்று முன்தினம் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து, தேர்வு தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், மாணவிகள் அனுமதிச் சீட்டு, பேனா ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தாங்கள் வந்த வாகனங்களை விட்டு இறங்கி தேர்வு மையத்தை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.