புதுடெல்லி: ரேப்பிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை டெல்லி போக்குவரத்துத் துறை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில அரசுகளைத் தொடர்ந்து டெல்லி அரசும் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. தடையை மீறினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

