ஊழியர்களுக்காக எட்டு புதிய மருத்துவமனைகள்

ஊழியர்களுக்காக எட்டு புதிய மருத்துவமனைகள்

1 mins read
40b51d5a-e3f0-44f8-b71f-51f2f23bcc01
-

சண்டிகார்: தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் எட்டு புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர், வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

சண்டிகாரில் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் 190வது கூட்டத்தில் பேசிய அமைச்சர், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, ஆந்திரா, உத்தரப்பிரசேதம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.