மும்பையின் தாராவியில் உள்ள கமலா நகர் குடிசைப் பகுதியில் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 25க்கும்
அதிகமான குடிசைகள் எரிந்து சாம்பலாயின. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரி வித்தனர். தீ அணைப் பாளர்கள் நான்கு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறைந்தது 12 தீயணைப்பு வாகனங்கள் பயன் படுத்தப்பட்டன.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.
படம்: ஈபிஏ