ராகுல்: நிறைய குழந்தைகள் வேண்டும்

ராகுல்: நிறைய குழந்தைகள் வேண்டும்

1 mins read
03b7269e-250b-41d7-8330-ebe543d2bcd2
-

புது­டெல்லி: இன்­ன­மும் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளா­மல் ஒற்­றை­யராக இருப்­ப­தற்­குக் கார­ணம் என்ன என்று ராகுல் காந்­தி­யி­டம் கேட்­ட­தற்கு, அதற்­கான கார­ணம் தெரி­ய­வில்லை என்று கூறி­உள்­ளார்.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் நாடா­ளு­ மன்ற உறுப்­பி­ன­ரான ராகுல், இத்­தா­லிய நாளி­தழ் ஒன்­றுக்கு அளித்த பேட்­டி­யில் தனது நீண்ட நடைப்­ப­ய­ணம், திரு­ம­ணம், நாடாளுமன்­றத் தேர்­தல் உள்ளிட்ட கேள்விகளுக்கு சுவை­பட பதி­ல­ளித்­துள்­ளார்.

"உங்­க­ளுக்கு 52 வய­தா­கிறது. இன்­ன­மும் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளா­மல் இருக்­கி­றீர்­களே," என்று அவ­ரி­டம் கேட்­கப்­பட்­ட­தற்கு, "விசித்­தி­ர­மா­கத்­தான் இருக்­கிறது. திரு­ம­ணம் செய்­யா­மல் இருப்­ப­தற்­கான கார­ணம் தெரி­ய­வில்லை. செய்ய வேண்­டிய பணி­கள் நிறைய இருக்­கின்­றன. ஆனால் எனக்கு நிறைய குழந்­தை­கள் பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற ஆசை இருக்­கிறது," என்று பதி­ல­ளித்­துள்­ளார்.

தாடி­யைப் பற்றி கேட்­ட­தற்கு, "நடைப் பய­ணம் முழு­வ­தும் தாடியை எடுப்­ப­தில்லை என்று முடிவு செய்­தி­ருந்­தேன். இப்­போது அதை தொடர்ந்து வைத்­துக்­கொள்­வதா அல்­லது வேண்­டாமா என்று நான் முடிவு செய்ய வேண்­டும்," என்­றார்.

"அடுத்த தேர்­த­லில் மோடி­யைத் தோற்­க­டிக்க முடி­யும் என்­பதை உறு­தி­யா­கக் கூற முடி­யாது. ஆனால் எதிர்க்­கட்­சி­கள் ஒன்­றி­ணைந்­தால் 100 விழுக்­காடு அவ­ரைத் தோற்­க­டிக்க முடி­யும். நான் இந்­திய பாட்­டி­யான இந்­தி­ரா­வின் செல்­லம். அவ­ருக்கு என்னை ரொம்­பப் பிடிக்­கும்.

"இத்­தா­லி­யப் பாட்­டி­யான பவுலோ மைனோ­வுக்கு (சோனியா காந்­தி­யின் தாயார்) பிரி­யங்­கா­வைப் பிடிக்­கும். இத்­தாலி பாட்டி 98 வயது வரை வாழ்ந்­தார். அவர் மீது எனக்கு மிகுந்த பற்று உண்டு," என்று ராகுல் கூறினார்.