ஆறு வயது நிரம்பினால் மட்டுமே 1ஆம் வகுப்பு

ஆறு வயது நிரம்பினால் மட்டுமே 1ஆம் வகுப்பு

1 mins read
bba934cf-37bf-4206-b909-7f5d95bc871e
-

புது­டெல்லி: புதிய தேசிய கல்­விக் கொள்­கை­யின்­படி ஆறு வயது முடிந்­தால் மட்­டுமே 1ஆம் வகுப்­பில் சேர்த்­துக்கொள்ள வேண்­டும் என்று இந்­திய கல்வி அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது.

அனைத்து குழந்­தை­க­ளுக்­கும் மூன்று ஆண்­டு­கள் தர­மான மழ­லை­யர் கல்வி கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்கின்­றன.

அதன் ஒரு பகு­தி­யாக கடந்த அக்­டோ­பர் மாதம் அடித்­தள நிலைக்­கான பாடத்­திட்ட கட்­ட­மைப்பை மத்­திய கல்வி அமைச்சு அறி­மு­கம் செய்­தது.

இந்த நிலை­யில் அமைச்­சின் பள்­ளிக் கல்வி, எழுத்­த­றி­வுத் துறை மாநி­லங்­க­ளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பிய சுற்­ற­றிக்­கை­யில் 1ஆம் வகுப்­பில் சேர குழந்­தை­க­ளுக்கு ஆறு வயது பூர்த்­தி­யாகி இருக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப் பட்­டுள்­ளது.