கொரோனா அச்சம்: மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய்-மகன் மீட்பு

கொரோனா அச்சம்: மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய்-மகன் மீட்பு

1 mins read
67e253c3-08ca-40f2-90c6-2be2ae6ea3cb
-

குரு­கி­ராம்: ஹரி­யாணா மாநி­லம், குரு­கி­ரா­மில் கொவிட்-19 தொற்­றால் எங்கே உயிரை இழக்க நேரி­டுமோ என்ற அச்­சம் கார­ண­மாக கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக வீட்டை விட்டு வெளியே வரா­மல் ஒரு தாயும் மக­னும் முடங்­கிக் கிடந்த சம்­ப­வம் இப்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

தனி­யாக வாழ்ந்து வந்த பெண்­ணின் கண­வர் அளித்த புகாரை அடுத்து, காவ­லர்­கள் தாய்-மகனை மீட்­டுள்­ள­னர்.

இதுகுறித்து குழந்­தை­கள் நல ஆணைய உறுப்­பி­னர் உஷா சோலங்கி கூறு­கை­யில், "சுஜன் மாஜி என்­ப­வர் குரு­கிராம் காவல்­நி­லை­யத்­தில் அளித்த புகாரில், தன் மனை­வி­யும் மக­னும் வீட்­டுக்­குள் பூட்­டிக்­கொண்டு உள்ளனர் என்றும் அவர்­களை மீட்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்றும் கோரி­யி­ருந்­தார்.

"இதை­ய­டுத்து, காவல்­து­றை­யி­னர் சம்பந்தப்பட்ட குடி­யி­ருப்­புக்­குச் சென்று, ­பெண்­ணை­யும் 11 வயது மக­னை­யும் மீட்டு மருத்­துவமனை­யில் அனு­ம­தித்­த­னர். வெளியே வந்­தால் ெகாரோனா வந்­து­வி­டுமோ என்ற அச்­சத்­தில் இரு­வ­ரும் தங்­களை வீட்­டுக்­குள் வைத்­துப் பூட்­டிக் கொண்­டது தெரிய வந்­துள்­ளது. ­பெண்­ணின் மன­நி­லையை ஆரா­ய­வும் காவல்­து­றை­யி­னர் முடிவு செய்­துள்ளனர்," என்றார்.

காவல்துறை யினர் 11 வயது மகனையும் (இடப்படம்) தாயையும் மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

படம்: ஊடகம்