பேருந்தில் உலகைச் சுற்றி வரும் தம்பதியர்

2 mins read
8b439a31-e4df-4512-9c01-276a8b08c32b
-

மாமல்லபுரம்: பேருந்தை சொகுசு வீடாக்கி உல­கம் முழு­வ­தும் குடும்­பத்­து­டன் சுற்றி வரும் ஜெர்­மன் தம்­ப­தி­யர், வாழ்க்­கையை முழு­மை­யாக அனு­ப­விக்­கும்­படி அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

பெர்­லின் நக­ரைச் சேர்ந்த காய், 45, இவ­ரு­டைய மனைவி நீனா, 44, தம்­ப­தி­யர், தக­வல் தொழில்­நுட்­பத் துறை வேலை அலுப்­புத் தட்­டி­ய­தால் 12 வயது மகன் பென், 10 வயது மகள் லெனி ஆகி­யோருடன் பேருந்­தில் உல­கைச் சுற்றி வரு­கின்­ற­னர்.

துபா­யில் இந்த உல்­லா­சப் பய­ணத்­தைத் தொடங்­கிய குடும் பத்­தி­னர் ஈரான், பாகிஸ்­தானை சுற்­றிப் பார்த்­து­விட்டு இந்­தி­யா­வில் வட மாநி­லங்­க­ளைக் கடந்து தற்­போது மாமல்­ல­பு­ரத்­துக்கு வந்­துள்­ள­னர்.

சமை­யல் அறை, படுக்கை அறை, குளி­யல் அறை, குளிர் சாதன வசதி, துணி துவைக்­கும் சாத­னம், குளிர்­சா­த­னப் பெட்டி, தெலைக்­காட்சி என ஒரு சொகுசு வீட்­டில் இருக்­கும் அனைத்து வச­தி­களும் இந்­தப் பேருந்­துக் குள் கொண்டு வந்­துள்­ள­னர்.

மின்­சா­ரத்­துக்­காகப் பேருந்­தின் மேற்­கூ­ரை­யில் சோலார் தக­டு­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

மடிக்­க­ணினி மூலம் பிள்ளை கள் தின­மும் இணைய வகுப்பு களைப் பயின்று வர, எதை­யும் இழந்து விடா­மல் தங்­க­ளது கன­வு­களை நிறை­வேற்றி வருவதாக நீனா தெரி­வித்­தார்.

200 நாள்­களில் 22,000 கிலோ மீட்­ட­ருக்கு மேல் பய­ணம் செய்­துள்ள இக்குடும்­பத்­தி­னர், இந்­தி­யப் பய­ணத்தை முடித்துக்­கொண்டு நேப்­பா­ளம், மியன்­மார், தாய்­லாந்து, மலே­சியா, சிங்­கப்­பூர், பிரே­சில் உள்­ளிட்ட நாடு­கள் வழி­யாக அமெ­ரிக்­கா­வில் தங்­க­ளது சுற்­றுப்­ப­ய­ணத்தை நிறைவு செய்ய உள்­ள­தா­கக் கூறி­னார்.

வாழ்க்­கையை அனு­ப­விக்­கவே இப்பய­ணத்தை தொடங்கி உள்­ள­தாகவும் கூறி­யுள்­ள­னர்.