புதுடெல்லி: பயங்கரவாதி களுக்குத் தொடர்ந்து உதவி வந்தாலும், எந்தவிதமான தண்டனையும் இன்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் செயல்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.
மேலும், பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடங்களை பாகிஸ்தான் வழங்குவதாக ஐநாவுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.
"இம்முறை பாகிஸ்தான் எழுப்பும் புகார்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. கடந்த காலங்களில் நாங்கள் அளித்துள்ள பதில்களை மீண்டும் படித்துப்பார்க்க அறிவுறுத்துகிறோம்," என்றார் இந்தியத் தூதர் பிரதிக் மாத்தூர்.

