உலகின் மூன்றாவது பெரிய பொருளியலாக இந்தியா

உலகின் மூன்றாவது பெரிய பொருளியலாக இந்தியா

1 mins read
43a42831-abb5-4fdd-8cf9-06e8a3133e43
-

புனே: இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாகவும் இது மிகப்பெரிய பலம் தருவதாகவும் மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச் சர் பியூஸ் கோயல் தெரிவித் துள்ளார்.

புனேயில் நடைபெற்ற ஆசிய பொருளாதாரக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், இன்னும் ஐந்து ஆண்டு களில் உலகின் மூன்றாவது பெரிய பொருளியல் வல்லரசாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் நமது பொரு ளியலை 35 முதல் 40 டிரில்லியன் டாலர் பொருளியலாக உயர்த்த முடியும் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொரு ளியல் நாடாக இருப்பது மட்டு மன்றி, இன்னும் பல ஆண்டு களுக்கு இந்த வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.