24 காரட் தங்கத் தோசையை சுவைக்க ஹைதராபாத் மக்கள் ஆர்வம்

1 mins read
bf07dc7f-aca9-4570-b4c1-d506b3c842bf
-

ஹைத­ரா­பாத்: ஹைத­ரா­பாத்­தில் 24 கேரட் தங்­கக் காகி­தத்­தைப் பயன்­ப­டுத்தி தயா­ரிக்­கப்­படும் தோசை ஆயி­ரம் ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கிறது.

இந்­தி­யர்­க­ளின் தங்க நகை மோகம் இந்தத் தங்கத் தோசை­யைச் சாப்­பி­டு­வ­தி­லும் வெளிப்­பட்டுள்­ளதாகவும் இத­னைச் சாப்­பிட ஹைத­ரா­பாத் மக்­கள் பல­ரும் ஆர்­வம் காட்டி வரு­வ­தாகவும் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன.

தெலுங்­கானா மாநி­லம், ஹைதரா­பாத்­தில் உள்ள பஞ்­சாரா ஹில்ஸ் பகு­தி­யில் 'ஹவுஸ் ஆஃப் தோசாஸ்' என்ற உண­வ­கத்­தில் தான் தங்கத் தோசை விற்ப னைக்கு வந்­துள்­ளது. தோசை வார்த்­த­பின் அதில் சுத்­த­மான 24 காரட் தங்கக் காகி­தத்தை ஒட்டி, அது பறந்­து­வி­டா­மல் இருக்க அதன் மேல் நெய் ஊற்­று­கின்­ற­னர். இத­னால்­தான் இந்த தோசை ரூ.1,000க்கு விற்­கப்­ப­டு­கிறது.

ஆயி­னும், இத­னைச் சாப்­பிட குடும்­பம் குடும்­ப­மாக வருகின்ற னர். அதி­லும் வார இறுதி நாட்­களில் கூட்­டம் அதி­கம்.

இந்தத் தங்கத் தோசை­யு­டன் நெய்­யில் வறுத்த முந்­திரி, பாதாம் பருப்பு, நெய், விதவிதமான சட்னிகள், காரப்­பொடிகள் என ஒன்பது வகையான பதார்த்தங் களும் பரி­மா­றப்­ப­டு­கின்றன.

'டபுள்­டக்­கர் பீட்சா' தோசை ரூ.300, பீட்சா தோசை ரூ.150, உலர் பழங்­கள் தோசை ரூ.170, 'ரெட் சில்லி' தோசை ரூ.70 என விதவிதமான தோசைகளும் இங்கு விற்கப்படுகின்றன.