நாகலாந்து, மேகாலயாவில் வாக்களிப்பு; பாதுகாப்பு தீவிரம்

நாகலாந்து, மேகாலயாவில் வாக்களிப்பு; பாதுகாப்பு தீவிரம்

1 mins read
8bbbf422-9442-4317-875a-6c484fb765ee
-

மேகாலயா: நாக­லாந்து, மேகா லயா சட்­டப்­பே­ரவை தேர்தலுக்­கான பிர­சா­ரம் முடி­வ­டைந்த நிலை­யில், இவ்­விரு மாநி­லங் களி­லும் இன்று வாக்­குப்­ப­திவு நடை­பெ­று­கிறது.

இரு மாநி­லங்­க­ளி­லும் தலா 60 தொகு­தி­க­ளுக்கு தேர்­தல் நடை­பெ­றும் நிலை­யில், பாஜக, காங்­கி­ரஸ் உட்­பட பல்­வேறு அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் இத்­தேர்­தலில் போட்­டி­யிடுகின்­ற­னர்.

இரு மாநி­லங்­க­ளி­லும் வாக்­குப்­ப­திவை அமை­தி­யாக நடத்த அனைத்து ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­யுள்ள தேர்­தல் ஆணை­யம், மக்­கள் வாக்­குப்­ப­தி­வில் பங்­கேற்று தங்­க­ளது ஜன­நா­ய­கக் கட­மையை நிறை­வேற்ற வேண்டும் என்­றும் கேட்­டுக்­கொண்டு உள்­ளது.

இத­னி­டையே, மேகா­லயா மாநி­லத்தை ஒட்­டி­யுள்ள பங்ளாதேஷ் எல்லை முழு­வ­தும் மூடப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு கருதி கூடு­தல் போலி­சார் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதே­போல் நாக­லாந்து எல்­லை­யி­லும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.