நாகாலாந்து: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இரு மாநிலங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசை களில் நின்று தங்களது வாக் கினைப் பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு இந்திய நேரப்படி மாலை 4 மணியுடன் நடைபெற்று முடிந்த நிலையில், 3 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 72.99 விழுக்காடும் மேகாலயாவில் 63.91 விழுக்காடு வாக்குகளும் பதிவாகி இருந்தன.
இதனிடையே, மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறை வேற்றும்படி பிரதமர் மோடி டுவிட் டர் பதிவில் வலியுறுத்தி இருந் தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, இரு மாநில வாக்காளர்களிடமும் நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட ஒரு வாய்ப்பை வழங்குமாறு வேண்டு கோள் விடுத்தார்.
இரு மாநில மக்களும் முற்போக்கான, நலன் சார்ந்த அரசாங்கங்களை விரும்புவ தாகவும் கார்கே கூறினார்.
மேகாலயா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜக ஓர் இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதனால் 59 தொகுதிகளுக் குத் தேர்தல் நடைபெறுகிறது.
மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை
திரிபுராவில் கடந்த 16ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

