புதுடெல்லி: டென்மாா்க் நாட்டின் பட்டத்து இளவரசா் ஃபிரடெரிக் ஆன்ட்ரே ஹென்றி கிறிஸ்டியனும் பட்டத்து இளவரசி மேரி எலிசபெத்தும் ஐந்து நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த இரண்டு தசாப்தங்களில் (20 ஆண்டுகளில்) டென்மார்க் நாட்டு அரச குடும்பம் முதல்முறையாக இந்தியா வந்துள்ளது. அவர்களது வருகை இந்திய-டென்மார்க் நாடுகளின் நெருங்கிய நட்புறவை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போது அதிபர் திரெளபதி முா்மு, துணை அதிபர் ஜகதீப் தன்கா் ஆகியோரையும் அரச தம்பதியர் சந்திக்க உள்ளனா்.

