புதுடெல்லி: எட்டு ேகாடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக 16,800 கோடி ரூபாயை போடும் திட்டத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
'பிரதமர் கிஷான்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள ஏறக்குறைய எட்டு கோடி விவசாயிகளுக்கு 13வது தவணையாக தலா ரூ.2,000 நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கில் போடப்பட்டது.
கடந்த 2019ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் அடிப்படையில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாகக் கொடுக்கப்படுகிறது. தற்போது வரை இத்திட்டம் மூலம் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.

