தெலுங்கானா: தன் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துடிப்புடன் நடனமாடிக்கொண்டிருந்த 19 வயது இளையர் ஒரு வர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் அமைந்துள்ள கமோல் கிராமத்தில் கிருஷ்ணையா என்பவரது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மணமகனின் நெருங்கிய உறவினரும் நண்பருமான 19 வயது இளைஞர் முத்தியம் கலந்துகொண்டு சினிமா பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது முத்தியம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

