செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
2e66a954-0e23-453c-8d42-f729e1492828
-

'வெங்காய ஏற்றுமதிக்குத் தடையில்லை'

புனே: நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இச்சூழலில், வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஆனால், வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய வா்த்தக அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் காலகட்டத்தில் ரூ.4,343 கோடி மதிப்பிலான வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது என்றும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 16.3 விழுக்காடு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி: சொந்த வீடு இல்லை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், "எனக்கு 52 வயதாகிறது. ஆனால், இன்று வரை எனக்கு சொந்த வீடு இல்லை," என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். கடந்த 1977ல் நாங்கள் வசித்து வந்த அரசு பங்களாவை என் குடும்பத்தினர் காலி செய்துகொண்டிருந்தபோது, 'ஏன் காலி செய்கிறீர்கள்' என என் தாயிடம் கேட்டேன். 'அது அரசு வீடு, நம் வீடு அல்ல' என அவர் பதில் அளித்தார். 'அடுத்து எங்கு செல்கிறோம்' எனக் கேட்டதற்கு 'தெரியாது' என்றார். "இப்போது டெல்லியில் வசிக்கும் வீடு கூட என்னுடையது அல்ல," என்றார்.