இந்தூர்: முன்னாள் கல்லூரி மாணவரால் தீவைக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த கல்லூரிப் பேராசிரியர் விமுக்தா ஷர்மா (படம்) கடந்த சனிக்கிழமை காலை மரணமடைந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் செயல்பட்டு வரும் பிஎம் மருந்தியல் கல்லூரியின் முதல்வரும் பேராசிரியருமான விமுக்தா ஷர்மாவின், 54, உடலில் 90% தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருடைய பல உறுப்புகள் செயலிழந்து, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அவருக்கு சிசிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதே கல்லூரியின் முன்னாள் மாணவரான அஷுடோஷ் ஸ்ரீவஸ்தவா, 24, தனது இறுதியாண்டுத் தேர்வில் தோல்வியடைந்த தாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அதற்கு பேராசிரியர் சர்மாதான் காரணம் என அஷுடோஷ் கருதியதால் சர்மாவுக்கு அவர் தீவைத்துள்ளார். அஷுடோஷ்மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

