அகமதாபாத்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 38வது இடத்துக்குத் தொழிலதிபர் கெளதம் அதானி தள்ளப்பட்டார். அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் அவரது சொத்து மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதானி குழுமம் பல ஆண்டு களாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா வின் 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' என்ற நிறுவனம் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் விலை சரிந்து வருகிறது. இதனால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய அதானி, இப்போது 38வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஃபோர்ப்ஸ் இதழின் நிகழ்நேர கண்காணிப்பின்படி, அதானியின் சொத்து மதிப்பு US$33.4 பில்லி யன் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை ஜனவரி 24ஆம் தேதி வெளி யிடப்படுவதற்கு முன்னதாக, அதானியின் சொத்து மதிப்பு US$119 பில்லியனாக இருந்தது.
இந்நிலையில், ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது எட்டாவது இடத்தில் உள்ளார்.

